ஹிமாசலில் கடும் பனிப்பொழிவு: 279 சாலைகள் மூடல்!
ஹிமாசலப் பிரதேசத்தில் பனிப்பொழிவு மற்றும் மழை காரணமாக நான்கு தேசிய நெடுஞ்சாலைகள் உள்பட மொத்தம் 279 சாலைகள் மூடப்பட்டுள்ளன.
கடந்த 24 மணி நேரத்தில் மணாலி உள்ளிட்ட இடங்களில் அதிகப் பனிப்பொழிவு நிலவியுள்ளது. இந்த பனிப்பொழிவானது மார்ச் 20 வரை மேற்கு இமயமலைப் பகுதியைப் பாதிக்கும் என வானிலை கணித்துள்ளது.
மொத்த சாலைகளில் சுமார் 96 சதவீதம் உயரமான பகுதிகள் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகள் அடைக்கப்பட்டுள்ளது. மேலும் வெள்ளிக்கிழமை இரவு லாஹஸ், ஸ்பிதியில் 249 சாலைகளும், சம்பாவில் 11, கின்னூரில் 9 சாலைகளும் மூடப்பட்டன.
குலு மற்றும் மண்டியில் தலா 4 சாலைகளும், காங்க்ரா மற்றும் சிம்லாவில் தலா ஒன்றும், மாநில அவசரக்கால செயல்பாட்டு மையத்தின்படி அடைக்கப்பட்டுள்ளது.
246 டிரான்ஸ்பார்மர்கள் பழுதடைந்துள்ளதால், மூன்று குடிநீர் திட்டங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
குறைந்தபட்ச வெப்பநிலையும், அதிக குளிரும் நிலவி வருகின்றதால் அங்குள்ளோர் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளன.