ஆளில்லா விமானங்கள் தாக்குதல் : பற்றியெரியும் ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள்
ரஷ்யாவின் சமாரா ஒப்லாஸ்டில் உள்ள இரண்டு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை ஆளில்லா விமானங்கள் தாக்கியதில் அந்த சுத்திகரிப்பு நிலையங்களில் பாரிய தீ பரவல் ஏற்பட்டது.
தாக்குதல் உள்ளூர் நேரப்படி இன்று 06:00 மணிக்கு நடந்ததாகக் கூறப்படுகிறது. முதல் ஆளில்லா விமானம் சிஸ்ரானில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய வளாகத்தை தாக்கியது. அங்கு தீ விபத்து ஏற்பட்டது. தற்போது 500 சதுர மீட்டர் பரப்பளவில் தீ பரவியுள்ளது.
ஆளில்லா விமானங்கள் தாக்குதல்
அதே நேரத்தில், நோவோகுய்பிஷெவ்ஸ்க் சுத்திகரிப்பு நிலையத்தை பல ஆளில்லா விமானங்கள் தாக்கின. அங்கும் தீ பரவி அரை மணி நேரத்தில் அணைக்கப்பட்டது.
இதற்கிடையில், அதிகாரிகள் இதை ஒரு “தாக்குதல் முயற்சி ” என்றும், நோவோகுய்பிஷெவ்ஸ்க் “அந்த தாக்குதலை முறியடித்துள்ளனர்” என்றும் தெரிவிக்கின்றனர்.
எவ்வித உயிர்ச்சேதமும்
இந்த தாக்குதல்களில் எவ்வித உயிர்ச்சேதமும் ஏதும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
லிபெட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமும் ஒரே இரவில்ஆளில்லா விமானங்களால் தாக்கப்பட்டதாவும் அறியப்படுகிறது.