;
Athirady Tamil News

இந்திய மக்களவைத் தேர்தல்! திகதிகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

0

இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல் திகதி அட்டவணையை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.

இதன்படி, ஏப்ரல் மாதம் 19 முதல் ஜூன் மாதம் 1 திகதி வரை 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதி வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 4 ஆம் திகதி வாக்கு எண்ணிக்கை என விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இடைத்தேர்தல்
தமிழகத்தில் விளவங்கோட்டுக்கான இடைத்தேர்தலும் ஏப்ரல் 19 ஆம் திகதி நடைபெறும்’ என அறிவிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக நடைபெறும் தேர்தலில், தமிழகம், புதுச்சேரி உள்பட மொத்தம் 102 தொகுதிகளுக்கு ஏப்ரல் 19 ஆம் திகதி அன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அதேபோல், கேரளா, கர்நாடகா உள்பட 89 தொகுதிகளுக்கு ஏப்ரல் 26 ஆம் திகதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

வாக்குப்பதிவு
குஜராத், சண்டிகர் உள்பட 94 தொகுதிகளுக்கு மே 7 ஆம் திகதி மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இதனையடுத்து, நான்காம் கட்ட வாக்குப் பதிவானது, மே 13 ஆம் திகதி அன்று ஆந்திரப் பிரதேசம், பீகார், தெலுங்கானா உள்பட 96 தொகுதிகளுக்கு நடைபெறகிறது.

ஐந்தாம் கட்ட தேர்தலில், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், ஜம்மு – காஷ்மீர் உள்பட 49 தொகுதிகளுக்கு மே 20 ஆம் திகதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

உத்தரப் பிரதேசம், டெல்லி, ஹரியானா உள்பட 57 தொகுதிகளுக்கு ஆறாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. பஞ்சாப், ஹிமாச்சலப்பிரதேசம் உள்பட மீதமுள்ள 57 தொகுதிகளுக்கு ஏழாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஏழு கட்டமாக நடைபெறும் இந்த மக்களவைத் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4 ஆம் திகதி எண்ணப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.