;
Athirady Tamil News

வளர்ப்பு பல்லி கடித்து பரிதாபமாக உயிரிழந்த நபர்! அமெரிக்காவில் சம்பவம்

0

அமெரிக்காவில் 2 அடி நீளமுள்ள வளர்ப்பு பல்லி கடித்ததில் நபரொருவர் பல முறை வாந்தி எடுத்ததுடன், 2 மணித்தியாலம் வரை சுயநினைவற்று உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

தென்மேற்கு அமெரிக்கா மற்றும் மெக்சிகோவில் வளர கூடிய கிலா மான்ஸ்டர்ஸ் வகையை சேர்ந்த பல்லிகள். 2 அடி வரை வளர கூடியவை.

இந்நிலையில், கொலராடோவில் வசித்த 52 வயதான கிறிஸ்டோபர் வார்டு என்பவர் 2 கிலா மான்ஸ்டர்ஸ் வகை பல்லிகளை வளர்த்து வந்திருக்கிறார்.

அந்த பல்லிகளில் ஒன்று கடந்த பெப்ரவரியில் அவரை 4 நிமிடங்கள் வரை கடித்துள்ளது. உடனேயே அவருக்கு அறிகுறிகள் தென்பட தொடங்கின.

தொடர்ந்து பல முறை வாந்தி எடுத்திருக்கிறார். சுவாசமும் நின்றுள்ளது. இதனால், அவர் 2 மணிநேரம் வரை சுயநினைவற்று போயிருக்கிறார்.

உடனடியாக அவருடைய காதலி அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.