வடக்கை சேர்ந்த நான்கு அதிகாரிகளுக்கு கிடைத்துள்ள வாய்ப்பு
வடக்கை சேர்ந்த நான்கு அதிகாரிகளுக்கு இலங்கை நிர்வாக சேவை விசேட தரம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை நிர்வாக சேவை விசேட தர தெரிவுக்கான நேர்முகத் தேர்வு நேற்று(16.03.2024) கொழும்பில் நடைபெற்றுள்ளது.
நாடு முழுவதும் காணப்படும் நிர்வாக சேவை விசேட தரத்திலான 43 வெற்றிடங்களை நிர்ப்பும் நோக்கில் நேர்முகத் தேர்வுக்கு 54 அதிகாரிகள் அழைக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 52 பேர் சமூகமளித்துள்ளனர்.
வாய்ப்புகள்
தேர்வுக்கான சிரேஷ்ட நிலைப்பட்டியலில் 43, 44, 45 மற்றும் 47 ஆவது இடங்களிலும் வடக்கைச் சேர்ந்த அதிகாரிகளே இடம்பெற்றிருந்த நிலையில் முதல் 43 இடங்களுக்குள் இருந்த ஓர் அதிகாரி நேர்முகத் தேர்வுக்குச் சமூகமளிக்காத காரணத்தால் 44 ஆவது இடத்தில் இருந்த வடக்கைச் சேர்ந்த அதிகாரி தற்போது 43 ஆவது இடத்தைப் பிடித்துக் கொண்டார். அவருக்கும் விசேட தர நிலை கிடைக்கும் வாய்ப்பு பெரும்பாலும் உறுதியாகியுள்ளது.
இருந்தபோதும் முழுமையான பரிசீலனைகளின் பின்னர் இடையில் உள்ள வேறு யாரும் அதிகாரிகள் சந்தர்ப்பத்தை இழந்தால், 43 இற்கு அடுத்த நிலையிலும் வடக்கைச் சேர்ந்த அதிகாரியே இருக்கின்றார் எனத் தெரிய வந்துள்ளது.
மேலும் தற்போது வரையான முதல் 43 இடங்களுக்குள்ளும் வடக்கைச் சேர்ந்த 4 அதிகாரிகள் இருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.