;
Athirady Tamil News

யாழில். மாடொன்றை இறைச்சியாக்கிய குற்றம் – முன்னாள் பொலிஸ் உத்தியோகஸ்தரை கைது செய்ய நடவடிக்கை

0

சட்டவிரோதமான முறையில் மாட்டினை இறைச்சியாக்கிய குற்றச்சாட்டில் முன்னாள் பொலிஸ் உத்தியோகஸ்தரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

வடமராட்சி புலோலி பகுதியில் வீடொன்றில் வைத்து சட்டவிரோதமான முறையில் மாடொன்று இறைச்சி யாக்க படுவதாக பொலிஸாருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் , குறித்த வீட்டிற்கு பொலிஸார் விரைந்திருந்தனர்.

பொலிஸாரை கண்டதும் மாட்டை இறைச்சியாக்கி கொண்டிருந்த நபர் வீட்டில் இருந்து தப்பி ஓடியிருந்தார். அதனை அடுத்து இறைச்சிகளை மீட்ட பொலிஸார் , வீட்டின் உரிமையாளரான , தப்பியோடியவரின் தாயாரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவரை விசாரணைகளின் பின்னர் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய வேளை , அவரை செவ்வாய்க்கிழமை வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை தப்பியோடிய நபர் , முன்னாள் பொலிஸ் உத்தியோகஸ்தர் எனவும் , பொலிஸ் உத்தியோகஸ்தராக கடமையாற்றிய கால பகுதியில் சிறுமி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகிய குற்றச்சாட்டில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.