எவராலும் தனித்து ஆட்சி அமைக்க முடியாது : பொன்சேகா வெளிப்படை
நாட்டில் தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலையின் படி எதிர்வரும் தேர்தலில் எவராலும் தனித்து ஆட்சி அமைக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவ தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
கட்சி சார்பற்ற அமைப்பினால் கண்டி ஜோர்ஜ் ஈ டி சில்வா பூங்கா முன்பாக மக்கள் புரட்சியை நோக்கி நிராயுதபாணியான கட்சி சார்பற்ற போராட்டம் என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட பிரச்சாரத்தில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
வாக்குகளை புத்திசாலித்தனமாக பயன்படுத்துங்கள்
எதிர்வரும் தேர்தலில் உங்கள் வாக்குகளை புத்திசாலித்தனமாக பயன்படுத்துங்கள், இந்த நாட்டை அழித்த பார்ப்பனமற்ற அரசியல்வாதிகளுக்கு ஏமாறாமல், அரசியல்வாதிகளின் கடந்த கால தவறுகளை ஆராய்ந்து உங்கள் வாக்குகளை புத்திசாலித்தனமாக பயன்படுத்துங்கள்
இந்த நாட்டில் நிலவும் சீர்கெட்ட அரசியல் கலாசாரம் மற்றும் தொலைநோக்கு பார்வையின்மை குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்துமாறும், அரசியல்வாதிகளிடம் ஏமாறாமல் நாட்டின் எதிர்காலத்தை முன்னெடுத்துச் செல்பவர்களுக்காக தமது வாக்குகளைப் பயன்படுத்துமாறும் பொன்சேகா வேண்டுகோள் விடுத்தார்.
எதிர்கால சந்ததியினருக்காக நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு நாட்டின் மீது உணர்வுள்ள மக்களின் இதயத்துடிப்பைப் புரிந்துகொள்ளக்கூடிய, எதிர்கால நெருக்கடிகளைப் புரிந்துகொள்ளக்கூடிய, அரசியல்வாதிகளின் வாக்குறுதிகளை நம்பி ஏமாறாமல் ஆட்சியாளர்களை நியமிக்க வேண்டும் என்றார்.
மக்கள் போராட்டத்தை முன்னெடுத்து, மாற்றத்தை கோரியதாக
நாட்டில் நாடாளுமன்றமும் ஜனநாயகமும் இருக்க வேண்டும் என்றாலும் அரசியல்வாதிகள் கொள்கையளவில் செயற்பட வேண்டும் எனவும் தலையெடுக்கும் குப்பைகளை சேகரித்து அரசியலுக்கு சென்றால் நாடு மீண்டும் சிக்கலில் மாட்டிவிடும் எனவும் பொன்சேகா வலியுறுத்தியுள்ளார்.
நாட்டு மக்கள் போராட்டத்தை முன்னெடுத்து, மாற்றத்தை கோரியதாகவும், ஆனால் பெரும்பான்மையான மக்களால் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை தற்போது கற்பனை செய்து பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பொன்சேகா தெரிவித்தார்.
தனது கட்சியின் இலாபத்தை அதிகரிப்பதற்காக எந்தவொரு மோசடிக்காரரையும் கட்சியில் சேர்த்துக் கொள்ளக் கூடாது என வலியுறுத்திய பொன்சேகா, தனது தரப்பிலிருந்து ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு முன்னர் நீதிமன்றத்திற்குச் சென்று அதற்கு எதிராக சட்டப் பாதுகாப்பைப் பெற்றுக் கொண்டதாகவும் குறிப்பிட்டார்.