இலங்கையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் இந்தியா முதலீடு
இலங்கையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் முதலீடு செய்வதற்கான பாரிய சாதகமான வாய்ப்பு இந்திய நிறுவனங்களுக்கு உள்ளதாக இந்திய எரிசக்தி அமைச்சின் செயலாளர் பூபிண்டர் சிங் பாலா தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே கடந்த ஜூலை மாதம் கைச்சாத்தான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் அமைக்கப்பட்ட ஆற்றல் தொடர்பான பணிக்குழுவின் முதலாவது கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் 2030 ஆம் ஆண்டளவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் 70 சதவீத உற்பத்தி என்ற இலக்கை அடைய இலங்கை உழைப்பதே இதற்கான காரணமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சூரிய சக்தி
மேலும் கொழும்பில் நடந்த இந்த கூட்டத்தில் அனைத்து தொழிநுட்ப உதவிகளையும் இலங்கைக்கு வழங்க இந்திய தரப்பினர் ஒப்புதல் அளித்துள்ளனர்.
இது தவிர இந்தியாவில் உள்ள முதன்மையான நிறுவனங்களில் சூரிய சக்தி மற்றும் காற்றாலை போன்றவை உட்பட அந்த துறைகள் தொடர்பானவற்றில் விசேட பயிற்சிகளை அளிக்கவும் முன்வந்துள்ளது.