பாகிஸ்தானின் உளவுக் கப்பலுக்கு உதவி வழங்கிய சீனா
பாகிஸ்தான் கடற்படையில் சேர்க்கப்படும் முதல் உளவு கப்பலுக்கு சீனா உதவிகளை வழங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பி.என்.எஸ். ரிஸ்வான் என்ற 87 மீற்றர் நீளமுள்ள இந்த கப்பல், ஏவுகணைகள் ஏவுவதை கண்காணித்தல், உளவுத் துறையின் சேகரிப்பு பணிகளை மேற்கொள்ளும் திறனை கொண்டதாக அமைந்துள்ளது.
சிறப்பு ஆராய்ச்சிக் கப்பல் என்ற பெயரில் அந்த கப்பலை உருவாக்க பாகிஸ்தானுக்கு சீனா அதிகளவில் உதவியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இலங்கையில் நிறுத்தப்பட்ட சீனக் கப்பல்
நவீன வசதிகள் கொண்ட இதுபோன்ற, கப்பல்களை அமெரிக்கா, இந்தியா, சீனா, ரஷ்யா, பிரான்ஸ் ஆகிய ஒரு சில நாடுகள் மட்டுமே வைத்துள்ளன.
இந்த நிலையில் தற்போது பாகிஸ்தானுக்கு அந்தக் கப்பலை சீனா வழங்கி உள்ளது.
ஏற்கனவே சீனா தனது உளவு கப்பலை இலங்கையில் நிலை நிறுத்திய போது இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
இந்திய பெருங்கடல் பகுதியில்
அத்துடன் சமீபத்தில் மாலைதீவுக்கு சீனாவின் உளவுக்கப்பல் வந்து சென்றுள்ளது.
மேலும் இந்திய பெருங்கடல் பகுதியில் சீனக் கப்பல் சுற்றி வரும் நிலையில் பாகிஸ்தானுக்கு கப்பலை வழங்கி சீனா உதவியுள்ளமை குறிப்பிடத்தக்கது.