அமெரிக்கா மற்றும் தென்கொரியாவை மிரட்டும் வடகொரியா!
அமெரிக்கா மற்றும் தென்கொரியாவை மிரட்டும் வகையில் வடகொரியா, இன்று காலை கிழக்கு கடற்கரையில் குறுகிய தூரம் சென்று தாக்கி அழிக்கும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை செலுத்தி சோதனை நடத்தியுள்ளது.
வடகொரியா, நேற்று காலை 7.44 மணிக்கு இரண்டு ஏவுகணைகளை ஒரே நேரத்தில் சோதனை நடத்திய நிலையில், 37 நிமிடங்கள் கழித்து மேலும் ஒரு ஏவுகணை சோதனை நடத்தியதாக ஜப்பான் தெரிவித்துள்ளது.
கொரிய தீபகற்பத்தின் அமைதிக்கு மிரட்டல்
அதேவேளை ஜப்பானை ஒட்டியுள்ள கடற்கரையில் வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனை நடத்தி வருவது அந்த நாட்டிற்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
வடகொரியா நடத்தும் ஏவுகணை சோதனையின்போது ஏவுகணைகள் கொரிய தீபகற்பத்திற்கும், ஜப்பான் கடல் பகுதிக்கும் இடையில் விழுகின்றன. இது அனைத்தும் ஜப்பான் பொருளாதார மண்டத்திற்கு வெளியில்தான் நடக்கிறது. இதனால் ஜப்பானுக்கு காயமோ, சேதமோ இல்லை என பிரதமர் ஃபுமியோ கிஷிடா தெரிவித்திருந்தார்.
அதேவேளையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தை வடகொரியா மீறுவதாக கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். அதேவேளை இன்று காலை ஏராளமான ஏவுகணைகளை வடகொரியா பரிசோதனை செய்ததை கண்டறிந்துள்ளோம் என தென்கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது. அத்துடன் இது கொரிய தீபகற்பத்தின் அமைதிக்கு மிரட்டல் எனவும் தெரிவித்துள்ளது. அ
மெரிக்கா உதவியுடன் எந்தவொரு ஆத்திரமூட்டும் செயலையும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் தென்கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது.
மணிக்கு 50 கி.மீட்டர் வேகத்தில் சென்று 300 முதல் 350 கி.மீட்டர் தூரம் வரையிலான இலக்குகளை தாக்கி அழிக்கும் ஏவுகணைகளை சோதனை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளை 11 நாட்கள் கொண்ட அமெரிக்கா-தென்கொரியா கூட்டு ராணுவ பயிற்சி கடந்த வியாழக்கிழமை முடிவடைந்த நிலையில், அமெரிக்கா மற்றும் தென்கொரியாவை மிரட்டும் வகையில் வடகொரியா, ஏவுகணை சோதனை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.