உலகிலுள்ள பழமையான நகரங்கள் எவை தெரியுமா!
உலகம் தோன்றிய காலம் தொட்டு இன்றைய 21 ஆம் நூற்றாண்டில் உலகம் எண்ணிலடங்கா மாற்றங்களை கண்டு வருகிறது இதன் விளைவாக உலகின் பாரம்பரிய பழம் பெரும் நகரங்கள் புதிய மாற்றங்கள் காரணமாக பழமையை இழந்தும் இயற்கை பேரிடர் காரணமாக அழிவடைந்தும் மாற்றங்களை கண்டு வருகின்றன.
அப்படியிருக்கையில் இன்றும் பழமையின் தன்மை மாறாமல் பண்டைய நகரங்கள் சில பல்லாயிரம் ஆண்டுகளாக இன்றும் வரலாறையும், கலாச்சாரத்தையும் சுமந்து கொண்டு நிற்கிறது, அத்தகைய பத்து நகரங்களை பற்றி தெரிந்துகொள்வோம்.
அரபு கலாச்சாரத்தின் தலைநகரம் என்று அழைக்கப்படும் டமாஸ்கஸ்தான் தற்போதைய உலகின் மிகப் பழமையான நகரமாகும், இது பல பெரிய நாகரிகங்களின் எழுச்சி மற்றும் வீழ்ச்சியைக் கண்டுள்ளது.
அலெப்போ – சிரியா
ஆய்வுகள் மற்றும் வரலாற்று சான்றுகளின்படி, டமாஸ்கஸ் முதன்முதலில் கி.மு ஏழாம் மில்லினியத்தின் இரண்டாம் பாதியில் இருந்தது. இது உலகில் மக்கள் இன்றும் வசிக்கும் மிகப் பழமையான நகரமாகவும், அரபு உலகின் ஒரு முக்கிய கலாச்சார மையமாகவும் விளங்குகின்றது, இன்று டமாஸ்கஸ் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட ஒரு பெருநகரப் பகுதியாக உள்ளது, மேலும் இந்த நகரம் 2008 ஆம் ஆண்டில் அரபு கலாச்சாரத்தின் தலைநகராக இது பெயரிடப்பட்டுள்ளது.
அடுத்ததாக அலெப்போ நகரம் அலெப்போ கவர்னரேட்டின் தலைநகராக செயல்படுகிறது, மேலும் இது 8,000 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து மக்கள் வசிக்கும் நகரமாக இருந்து வருகிறது. கி.மு. 11,000க்கு முற்பட்ட மனிதக் குடியிருப்புகளின் எச்சங்கள் அங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது, அலெப்போ நகரமானது மத்தியதரைக் கடல் மற்றும் மொசபதேமியா இடையே அமைந்துள்ளது, மேலும் அதன் புவியியல் இருப்பிடம் காரணமாக, பண்டைய காலத்தில் இது ஒரு முக்கியமான வர்த்தக மையமாக இருந்தது. இந்த அலெப்போ நகரமானது 2012 முதல் பேரழிவைச் சந்தித்து வருவதாகவும் கூறப்படுகின்றது.
அடுத்ததாக பெய்ரூட்டில் இருந்து வடக்கே 42 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள பைப்லோஸ் நகரம், இது லெபனானின் மவுண்ட் லெபனான் கவர்னரேட்டில் உள்ள மிகப் பழமையான மற்றும் மிகப்பெரிய நகரமாக விளங்குகிறது, இந்த நகரமானது கிமு 8800 முதல் 7000 வரை இந்த நகரம் மனிதர்களால் முதன்முதலில் ஆக்கிரமிக்கப்பட்டதாகவும், பின்னர் கிமு 5000 முதல் மக்கள் தொடர்ந்து வசித்து வந்ததாகவும் நம்பப்படுகிறது, இந்த நகரம் ஒரு தொல்பொருள் அதிசயமாக திகழ்கிறது, ஏனெனில் பல நூற்றாண்டுகளாக மனிதர்கள் வாழ்வதனால் இங்கு பல்வேறு கலாச்சாரங்களின் எச்சங்கள் காணப்படுவதாக கூறப்படுகின்றது.
ஆர்கோஸ் – கிரீஸ்
அதனைத் தொடர்ந்து, ஆர்கோஸ் நகரம், ஆர்கோஸ் என்பது கிரீஸின் ஆர்கோலிஸில் உள்ள ஒரு நகரமாகும் இது உலகில் தொடர்ச்சியாக மக்கள் வசித்து வரும் மிகப் பழமையான நகரங்களில் ஒன்றாகும், ஆர்கோஸ் இன்று சுமார் 22,000 குடியிருப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் ஏராளமான பழங்கால நினைவுச்சின்னங்களும் இங்கு காணப்படுகின்றன.
அடுத்து கிரேக்கத்தின் தலைநகரான ஏதென்ஸ், இது மிகப்பெரிய மக்கள்தொகையைக் கொண்ட நகரமாக விளங்குகிறது. இந்த நகரத்தின் ஆரம்பகால மனித இருப்பு கிமு 11 மற்றும் 7 ஆம் மில்லினியத்திற்கு இடையில் தொடங்கியிருக்கலாம் என நம்பப்படுகிறது, மேலும் இந்த நகரம் தத்துவஞானத்தின் பண்டைய இல்லமாகவும், மேற்கத்திய நாகரிகங்களின் பிறப்பிடமாகவும் விளங்குகின்றது.
சூசா – ஈரான்
அடுத்து சூசா நகரம், சூசா அல்லது புரோட்டோ-எலாமைட்டின் என்று அழைக்கப்படும். இந்த நகரானது ஒரு பண்டைய நகரமாகும். அதன் அமைவிடம் டைக்ரிஸ் நதிக்கு அருகில் உள்ளது, எனவே இது பண்டைய உலகின் மிக முக்கியமான நகரங்களில் ஒன்றாக விளங்கியுள்ளது. இந்த நகரம் ஒரு காலத்தில் அசீரியர்களால் முற்றிலுமாக அழிக்கப்பட்டதாக நம்பப்பட்டது, ஆனால் பின்னர் விரைவாக மீண்டும் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.
அடுத்ததாக எர்பில் நகரம், இந்த நகரத்தில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, பெர்சியர்கள், கிரேக்கர்கள், ரோமானியர்கள், மொங்கோலியர்கள் மற்றும் ஒட்டோமான் துருக்கியர் போன்றவர்கள் வசித்து வருகின்றனர். இந்த நகரின் மையத்தில், எர்பில் சிட்டாடல் உள்ளது, இது ஹாவ்லர் கோட்டை என்றும் அழைக்கப்படுகிறது
இந்த வரிசையில் அடுத்ததாக சுமார் 6,000 ஆண்டுகளாக மக்கள் வசிக்கும் நகரமாக சிடோன் உள்ளது, இந்த நகரம் மத்தியதரைக் கடலில் ஒரு முக்கியமான துறைமுகமாக அமைந்திருப்பதால், இது மிக முக்கியமான நகரங்களில் ஒன்றாக இருந்தது, சிடோன் லெபனானின் மூன்றாவது பெரிய நகரமாகும், இது தெற்கு கவர்னரேட்டில் அமைந்துள்ளது. கண்ணாடி உற்பத்தி சிடோனை பணக்கார நகரமாகவும், பிரபலமான நகரமாகவும் மாற்றியதாக கூறப்படுகிறது.
வாரணாசி – இந்தியா
அடுத்தது ப்லோவ்டிவ், ப்லோவ்டிவ் பல்கேரியாவின் இரண்டாவது பெரிய நகரமாகும். ப்லோவ்டிவின் வரலாறு ஆறு மில்லினியத்திற்கும் மேலாக பேசப்பட்டு வருகிறது, இது ஐரோப்பாவின் பழமையான நகரங்களில் ஒன்றாகும், இந்த நகரம் ஒரு முக்கியமான பாரசீக, திரேசிய, மாசிடோனியன் மற்றும் ஒட்டோமான் மையமாக இருந்தது. இன்று, ப்லோவ்டிவ் பல்கேரியாவின் இரண்டாவது பெரிய நகரமாகவும், வளர்ந்து வரும் சுற்றுலா மையமாகவும் காணப்படுகின்றது.
இந்த வரிசையில் கடைசியாக அறியப்படும் நகரமாக வாரணாசி விளங்குகிறது. இது இந்தியாவின் பழமையான நகரமாகவும் பழமையான மதமான இந்து மதத்தின் பிறப்பிடமாகவும் விளங்குகின்றது. பனாரஸ் அல்லது காசி என்றும் அழைக்கப்படும் இந்த நகரம் வட இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் கங்கை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது, கிமு 11 ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய இந்நகரம் உலகம் முழுவதிலுமுள்ள இந்து யாத்ரீகர்களையும் சுற்றுலாப் பயணிகளையும் ஈர்க்கிறது.
இந்த யாத்ரீகர்கள் கங்கை நதியில் நீராடுவதுடன் இங்கு இறுதிச் சடங்குகளையும் செய்கிறார்கள். இந்த நகரின் வளைந்த தெருக்களில் இந்துக் கடவுளான சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட காசி விஸ்வநாதர், பொற்கோயில் உட்பட சுமார் 2,000 கோயில்கள் வாரணாசியில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.