சாணக்கியன் பதவி விலகல் – கோப் குழுவிலிருந்து வெளியேறும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே ஆகியோரும் பொது நிறுவனங்கள் தொடர்பான குழுவில் (கோப்) இருந்து பதவி விலகல் செய்துள்ளனர்.
முதலாம் இணைப்பு
நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவும் பொது நிறுவனங்கள் தொடர்பான குழுவிலிருந்து (கோப்) விலக தீர்மானித்துள்ளார்.
அவர் தனது பதவி விலகல் கடிதத்தை இன்று (19.3.2024) சபாநாயகருக்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுகின்றது.
பதவி விலகல்
இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் பொது நிறுவனங்களுக்கான குழுவில் (கோப்) இருந்து பதவி விலகி உள்ளார்.
மேலும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத்தும் பொது நிறுவனங்கள் தொடர்பான குழுவில் இருந்து (கோப்) பதவி விலக தீர்மானித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரான் விக்கிரமரத்னவும் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு அல்லது கோப் குழுவின் அங்கத்துவத்தில் இருந்து நேற்று பதவி விலகல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.