;
Athirady Tamil News

லண்டன் வந்த ஒபாமா: இளவரசி கேட் விவகாரத்துடன் தொடர்புபடுத்தி கேலி

0

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமா லண்டன் வந்துள்ள நிலையில், இளவரசி கேட் எங்கிருக்கிறார் என கண்டுபிடிப்பதற்காகவே அவர் லண்டன் வந்துள்ளதாக இணையவாசிகள் கேலி செய்துவருகிறார்கள்.

தொடரும் சர்ச்சைகள்
இளவரசி கேட் அன்னையர் தினத்தன்று வெளியிட்ட புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்பது தெரியவந்ததைத் தொடர்ந்து, பிரித்தானியாவில் மட்டுமல்ல, அமெரிக்கா உட்பட பிற நாடுகளிலும் அது தொடர்பில் கடும் விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில், இளவரசி கேட் முன்னர் எடுத்த மற்றொரு புகைப்படமும் எடிட் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

பின்னர், இளவரசி கேட்டும், இளவரசர் வில்லியமும் பண்ணை கடை ஒன்றிற்கு சென்று திரும்பும் வீடியோ ஒன்று வெளியானது.

இதற்கிடையில், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியாகிய ஒபாமா லண்டன் வந்துள்ளார். உடனே இணையவாசிகள், ஒபாமாவின் வருகையையும் இளவரசி கேட்டின் வீடியோவையும் இணைத்து கேலி செய்யத் துவங்கியுள்ளனர்.

இதற்காகத்தான் ஒபாமா லண்டன் வந்தார்…
அதாவது, ஒபாமா லண்டன் வந்ததே இளவரசி கேட்டைக் கண்டுபிடிக்கத்தான் என்னும் ரீதியில் சமூக ஊடகமான எக்ஸில் மக்கள் செய்திகளை வெளியிட்டுவருகிறார்கள்.

கேட் மிடில்டனைக் கண்டுபிடிப்பதற்காக, முன்னாள் ஜனாதிபதி ஒபாமா லண்டனிலுள்ள பிரதமர் வீட்டை வந்தடைந்தார் என்று ஒருவர் கூற, மற்றொருவரோ, நேற்றுமுன் தினத்திலிருந்து  மன்னர் சார்லசையும் இளவரசி கேட்டையும் குறித்த வதந்திகள் பரவிவருகின்றன, இந்நிலையில், ஒபாமா ரிஷி சுனக்கை சந்தித்துள்ளார், ராஜ குடும்பத்தின் அறிவிப்புக்காக செய்தி சேனல்கள் காத்திருக்கின்றன, ஏதோ நடக்கிறது என்று குறிப்பிட்டிருந்தார்.

இன்னொருவர், ஒபாமா லண்டனிலுள்ள பிரதமர் வீட்டுக்கு வந்தார், சிறிது நேரத்தில் கேட் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டார் என்று கூற, மக்கள் சமூக ஊடகங்களில் தொடர்ந்து இளவரசி கேட்டை கேலி செய்தவண்ணம் இருக்கிறார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.