ராஜ குடும்ப அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஹரி மேகன் தொடர்பில் செய்யப்பட்டுள்ள மாற்றம்
பிரித்தானிய ராஜ குடும்பத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில், ஹரி மேகன் தொடர்பில் மாற்றம் ஒன்று செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
ஹரி மேகன் தொடர்பில் செய்யப்பட்டுள்ள மாற்றம்
பிரித்தானிய ராஜ குடும்பத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில், முன்னர் இளவரசர் ஹரிக்கென தனியாக ஒரு சுயசரிதையும், அவரது மனைவி மேகனுக்கென ஒரு சுயசரிதையும் கொடுக்கப்பட்டிருந்தன.
ஆனால், தற்போது அவை சுருக்கப்பட்டுள்ளன. அதாவது, இருவருக்கும் இருந்த தனித்தனியாக சுயசரிதைகள் அகற்றப்பட்டு, அவற்றிற்கு பதிலாக, இருவருக்குமாக ஒரே ஒரு சுயசரிதை மட்டுமே தற்போது ராஜ குடும்ப இணையதளத்தில் உள்ளது.
இந்த விடயத்தை, ராஜ குடும்ப ரசிகர்களின் Gert’s Royals என்னும் வலைப்பதிவின் பின்னணியில் உள்ளவர்களே முதன்முதலில் கண்டுபிடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.