தேர்தலால் சூடுபிடிக்கும் தென்னிலங்கை அரசியல்! மொட்டுக்கு அழைப்பு விடும் ரணில்
சிறிலங்காவின் அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்சவிற்கும் இடையில் நாளைய தினம் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெறவுள்ளதாக தகவ்களை கிடைக்கப்பெற்றுள்ளன.
இந்த சந்திப்பிற்கு அதிபர் ரணில் விக்ரமசிங்கவே பசில் ராஜபக்சவிற்கு அழைப்பு விடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா அரசியலில் தாக்கம்
எதிர்வரும் அதிபர் மற்றும் பொதுத் தேர்தல் தொடர்பிலும் ஏனைய அரசியல் விடயங்கள் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அதிபர் தேர்தலுக்கு முன்னதாக பொதுத் தேர்தல் நடத்துவது சாதகமான நிலையை ஏற்படுத்தும் என மொட்டு கட்சியின் ஒரு தரப்பினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அத்துடன் ரணிலுக்கும் மொட்டுக்கட்சி தரப்பினருக்கும் இடையிலான சந்திப்புகள் சிறிலங்கா அரசியலில் தாக்கம் செலுத்தும் என அரசியல் ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.