;
Athirady Tamil News

உலகிலேயே இரவிலும் சூரியன் மறையாத 5 நாடுகள்: எங்கே இருக்கு தெரியுமா?

0

பொதுவாக நாட்டில் பகல் 12 மணி நேரம், இரவு 12 மணி நேரம் தான் இயல்பு.

பகல் முடிந்ததும், சூரியன் மறைந்து சந்திரன் உதயமாகிறது. மறுபடியும் அடுத்த நாள் காலை சூரியன் உதயமாகிறது.

ஆனால் சில நாடுகளில் பகல், இரவு என்பது தனித்தனியாக இல்லை என்பது ஆச்சரியமான விடயமாக இருக்கிறது.

அந்தவகையில், இரவிலும் சூரியன் மறையாத உலகின் 5 நாடுகள் என்ன என்பதை குறித்து பார்க்கலாம்.

நார்வே
இங்கு மே மாத இறுதியில் இருந்து ஜூலை வரை 76 நாட்களுக்கு சூரியன் மறைவதில்லை.

அதனால்தான் ஆர்க்டிக் வட்டத்தில் அமைந்துள்ள நார்வே நள்ளிரவு சூரியனின் நாடு என்று அழைக்கப்படுகிறது.

நார்வேயின் ஸ்வால்பார்டில், ஏப்ரல் 10 முதல் ஆகஸ்ட் 23 வரை சூரியன் இரவும் பகலும் பிரகாசிக்கிறது.

நுனாவுட், கனடா
ஆர்க்டிக் வட்டத்திற்கு மேலே சுமார் இரண்டு டிகிரி, நுனாவுட் கனடாவின் வடமேற்கு பிரதேசங்களில் அமைந்துள்ளது.

இங்கு கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு 24 மணி நேரமும் சூரிய ஒளி இருக்கிறது. குளிர்காலத்தில், இந்த இடம் தொடர்ந்து 30 நாட்களுக்கு முற்றிலும் இருட்டாக இருக்கும்.

ஐஸ்லாந்து
கோடையில் ஐஸ்லாந்து இருட்டாக இருக்கும், ஜூன் மாதத்தில் சூரியன் மறையாததால் வெளிச்சமாகவே இருக்கும்.

பாரோ, அலாஸ்கா
மே மாத இறுதியில் இருந்து ஜூலை இறுதி வரை சூரியன் இங்கு மறைவதில்லை. குளிர்காலம் முழுவதும் நாடு முழுவதும் இருளில் மூழ்கிவிடும்.

நவம்பர் தொடக்கத்தில் இருந்து அடுத்த 30 நாட்களுக்கு இங்கு மீண்டும் சூரியன் உதிக்காது. இது போலார் நைட் என்று அழைக்கப்படுகிறது.

ஸ்வீடன்
ஸ்வீடனில் மே மாத தொடக்கத்தில் இருந்து ஆகஸ்ட் இறுதி வரை சூரியன் நள்ளிரவில் மறைந்து அதிகாலை 4 மணியளவில் உதயமாகும்.

இங்கு தொடர்ந்து 6 மாதங்கள் சூரியன் மறைவதில்லை, 24 மணி நேரமும் பகல் மட்டுமே இருக்கும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.