;
Athirady Tamil News

“பனை நுங்கு” சாப்பிட்டால் இப்படியெல்லாம் நடக்குமா..!

0

வெயில் காலம் வந்துவிட்டது.நுங்கு சீசன் ஆரம்பமாகியுள்ளது. வெயில் காலத்தில் தாகத்தை தணிக்க நுங்கு உண்பார்கள். இந்நிலையில் நுங்கு நன்மைகளை பற்றி தெரிந்துக்கொள்ளலாம்.

ஐஸ் ஆப்பிள் எனவும் அழைக்கப்படும் நுங்கானது வெயிலின் தாக்கத்தை குறைக்க மனிதனுக்கு கிடைத்த அருமருந்தாக கருதப்படுகிறது.

நுங்கு சாப்பிடுவதால் நன்மைகள்
பனை நுங்கிற்கு கொழுப்பை கட்டுப்படுத்தி உடல் எடையை குறைக்கும் ஆற்றல் உள்ளதோடு வெயில் காலத்தில் ஏற்படும் அம்மை நோய்களை தடுத்து உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தந்து உடலை சுறுசுறுப்பாக வைக்க உதவுகிறது.

வெயில் காலத்தில் உடல் உஷ்ணத்தால் அவதிப்படுபவர்களுக்கு நுங்கு சாப்பிட்டால் அவர்கள் தாகம் அடங்குவதோடு மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு இரண்டிற்குமே மருந்தாக பயன்படுகிறது.

பனை நுங்கிற்கு கொழுப்பை கட்டுப்படுத்தி உடல் எடையை குறைப்பதோடு கர்ப்பிணிகள் நுங்கு சாப்பிட்டால், செரிமானம் அதிகரிக்கும் என கூறப்படுகின்றது.

நுங்கானது, இரத்தசோகை உள்ளவர்களுக்கு நுங்கு நல்ல மருந்தாகும். நுங்கில் காணப்படும் அந்த்யூசைன் எனும் இரசாயனம் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் கட்டிகள் வருவதை தடுக்கும் சக்தி கொண்டது.

வெயில் காலம்
நுங்கு தொடர்ந்து சாப்பிட்டு வர கோடைக்காலத்தில் ஏற்படும் வேர்க்குரு நீங்கும். நுங்கு, குடல் புண்ணை ஆற்றும் தன்மை உடையதுடன் மேலும் இந்த நுங்கின் நீரை தடவினால் வேர்க்குரு மறையும்.

நுங்கு அதிகம் சாப்பிட்டால், உடலின் நீர்ச்சத்து அதிகரித்து, வெயிலினால் ஏற்படும் மயக்கம் குறையும். வயிற்றுப் புண், வயிற்றுப் பிரச்னை, மலச்சிக்கல், உடல் சோர்வு , தோல் நோய்கள், கல்லீரல் பிரச்சினை, அஜீரணக் கோளாறு, ஆற்றல் குறைவு போன்ற பிரச்னைகளையும் இந்த நுங்கு சுளைகளால் சரி செய்யலாம்.

கர்ப்பிணிகளும் இந்த நுங்கை உண்டால் மலச்சிக்கலை குறைக்கும். ஜீரண சக்தியை அதிகரிக்கும். அசிடிட்டி பிரச்சினையும் இருக்காது.

நுங்கு சுளைகளை இளநீரில் ஊற வைத்து உண்டால் அத்தனை ருசியாகவும், குளிர்சியாகவும் இருக்கும். கூடுதல் சுவைக்கு சர்க்கரை தேவைப்பட்டால் ஒரு ஸ்பூன் சேர்த்துக்கொள்ளலாம்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.