;
Athirady Tamil News

நரகமாகும் தண்ணீர் பஞ்சம்; பெங்களூரை தொடர்ந்து, மேலும் 5 நகரங்கள்! சென்னையின் நிலை என்ன?

0

இந்தியாவின் மேலும் பல நகரங்கள் தண்ணீர் பஞ்சத்தில் தவிக்க உள்ளதாக தெரியவந்துள்ளது அதில் சென்னையும் ஒன்று.

தண்ணீர் பஞ்சம்
இந்தியாவின் தகவல்தொழில்நுட்பத் துறையின் தலைநகராக சர்வதேச பெருமை பெற்ற பெங்களுருவின் நிலை இப்போது மிகவும் மோசமாக உள்ளது. அங்குள்ள மக்கள் தண்ணீர் பஞ்சத்தால் போராடுகிறார்கள்.

ஆனால், அந்த நிலைமை விரைவில் இந்தியாவில் உள்ள பல நகரங்கள் எதிர்கொள்ள இருக்கின்றன. தண்ணீர் பற்றாக்குறை காரணமாக நரகமாக அவதாரம் எடுக்க உள்ள முதன்மையான 5 நகரங்களை காணலாம்

டெல்லி
இந்தியாவின் தலைநகரான டெல்லியில் கற்று மடுப்பாடு அதிகரித்து உள்ளது. இந்த சூழலுடன் தண்ணீர் பஞ்சமும் கைகோத்து வருகிறது.

கோடைதோறும் தண்ணீர் பஞ்சத்தில் சிக்கித் தவிக்கின்றன. நிலத்தடி நீர் தட்டுப்பாடு மற்றும் நீரின் தரம் இல்லத்ததால் டெல்லி மக்கள் அவதி படுகிறார்கள்.

மும்பை
அதிகரித்து வரும் தண்ணீர் தேவை, சீரற்ற மழைப்பொழிவு மற்றும் நீர் ஆதாரங்கள் குறைந்து வருவதன் காரணத்தால் தேசத்தின் பொருளாதார தலைநகரம் பெரும் தவிப்புக்கு ஆளாகி இருக்கிறது.

இதனால் அங்கு விரைவில் தண்ணீர் பஞ்சம் வரக்கூடும் என தெரியவந்துள்ளது.

சென்னை
உலகளவில் தண்ணீருக்காகத் தவிக்கும் பெரும் நகரங்களின் பட்டியலில் சென்னை சேர்ந்திருக்கிறது. அன்றாடம் சுமார் 10 மில்லியன் லிட்டர் தண்ணீரை போக்குவரத்து மூலம் பூர்த்தி செய்துகொள்கின்றனர்.

சென்னை வாழ் மக்களுக்கு நீரின் தேவையை மேலும் அதிகரித்து இருப்பதால் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் என்று கூறுகின்றனர்.

லக்னோ
உத்தரபிரதேசத்தின் தலைநகரான லக்னோ ஏற்கனவே தண்ணீர் பஞ்சத்தை அடையாளம் கண்டிருக்கிறது.

ஒழுங்கற்ற மழைப்பொழிவு, வறண்டு கிடக்கும் கோமதி மற்றும் கிளை நதிகள் மற்றும் நகரமயமாக்கல் ஆகியவை, நீர் ஆதாரங்களுக்கு மேலும் அழுத்தம் தருவதால், லக்னோ மோசமான எதிர்காலத்தை நோக்கி விரைந்து வருகிறது.

ஜெய்ப்பூர்
ராஜஸ்தான் தலைநகரான ஜெய்ப்பூர் விரைவில் வறட்சியை பெற இருக்கிறது. பெருகும் மக்கள்தொகை மற்றும் வளரும் தொழில்மயமாக்கல் ஆகியவை நகரின் நீர்த் தேவையை அதிகரித்துள்ளது.

அங்குள்ள நீர் ஆதாரத்தில் அணையின் நம்பகத்தன்மை குறைந்ததால் நிலத்தடி நீரை மட்டுமே நம்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.