விவசாயப் பொருள்களை ஏற்றுமதி செய்வதற்கு அனுமதியளிக்கும் தாவரத் தடுப்புக் காப்பு நிலையம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் யாழ்ப்பாணத்தில் திறந்து வைப்பு!
விவசாயப் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான அனுமதியளிக்கும் தாவரத் தடுப்புக் காப்பு நிலையம் யாழ்ப்பாணத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் ஆகியோரல் இன்றையதினம் சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வு இன்று (22.03) காலை யாழ்ப்பாணம் பிரதம தபாலகத்தில் இடம்பெற்றது.
குறிப்பாக மரக்கறி, பழங்கள், பூ விதை வகைகள், நுண்ணங்கிகள், பூ அலங்காரங்கள் போன்ற தாவர உற்பத்திகளை ஏற்றுமதி செய்வதற்கான அனுமதியளிக்கும் நிலையமே இன்றையதினம் திறந்துவைக்கப்பட்டது.
இதுவரை காலமும் கொழும்பில் இயங்கிய குறித்த நிலையம் வடபகுதி மக்களின் நன்மை கருதி யாழ்ப்பாணம் தலைமை தபாலகத்தில் புதிதாக நிறுவப்பட்ட நிலையத்தையே இன்று காலை அமைச்சர் நாடா வெட்டி திறந்து வைத்திருந்தார்..
இந்நிகழ்வில் வடமாகாண ஆளுநர், வடமாகாண பிரதம செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.