;
Athirady Tamil News

தாம்பரம், காஞ்சி உள்பட 21 உள்ளாட்சி அமைப்புகளில் கடும் தண்ணீர் பஞ்சம்

0

தமிழகத்தில் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட 21 உள்ளாட்சி அமைப்புகளில் தண்ணீர் பஞ்சம் ஏற்படுவதற்கான அபாயம் அதிகரித்திருப்பதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

உலக வங்கியின் அண்மைய தொழில்நுட்ப அறிக்கையின்படி, தமிழ்நாடு காலநிலை மாற்றியமைக்கும் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக தமிழக அரசின் முன் முயற்சியால், உலக வங்கியின் 300 மில்லியன் டாலர் நிதியுதவியுடன் உருவாக்கப்பட்ட 21 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும் அதிக முதல் தீவிர தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீர்நிலைகளில், தண்ணீர் பற்றாக்குறை வரைபடத்தின் அடிப்படையில் உலக வங்கி, நடத்திய ஆய்வு முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டன.

தமிழ்நாடு நகர்ப்புறங்களில் 48 சதவீதத்துக்கும் அதிகமானோர் தண்ணீர் இருப்பு மற்றும் பாதுகாப்பற்ற சுகாதாரம் தொடர்பான பிரச்சினைகளை முன்பே அனுபவித்துள்ளனர். அந்த பட்டியலில் காஞ்சிபுரம், புதுக்கோட்டை, தாம்பரம், சேலம், தருமபுரி, நாகர்கோவில், திருவாரூர், காரைக்குடி, திண்டுக்கல், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, திருச்சி, ஆவடி, வேலூர், தேனி, ஈரோடு, நாமக்கல், ராஜபாளையம், கடலூர், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய 21 உள்ளாட்சிகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

2015 ஆம் ஆண்டு வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்தநிலையில்,, தமிழகத்தில் வரலாறு காணாத வெள்ளத்திற்கு வழிவகுத்தது, அதைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு கடந்த 140 ஆண்டுகளில் மாநிலம் கண்டிராத மிக மோசமான வறட்சியை ஏற்படுத்தியது.

2019 கோடையில், நான்கு பெரிய நீர்த்தேக்கங்கள் முழுமையாக வறண்டு போனதால், சென்னையில் நீர் நிலைகளில் தண்ணீரே இல்லாத ‘பூஜ்ஜிய நாள்’ என்ற அளவுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டது. நீர்வள அமைச்சகத்தால் அடையாளம் காணப்பட்ட 1,943 ஏரிகளில், கணிசமான எண்ணிக்கையானது நகராட்சி கழிவுகளை கொட்டுவதற்கான இடமாக மாற்றப்பட்டிருந்து குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.