;
Athirady Tamil News

இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு: வலியுறுத்தும் சிறீதரன்

0

அதிபர் தேர்தல்களில் நிற்பவர்கள் யாராக இருந்தாலும் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வை முன்வையுங்கள், அதுபற்றி பரிசீலிப்போம் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் அமரா பெண்கள் ஒன்றியத்தினுடைய மகளிர் தின நிகழ்வு இன்று (22 ) நடைபெற்றது இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் மகாசக்தி ஆகிய நீங்கள் இந்த இந்த பிரபஞ்சத்தை வெற்றி கொண்ட பெண்களாக மாறியுள்ளீர்கள்.

அரசியல் தீர்வு
2009க்கு முன்னர் ஆயுதப் போராட்டம் நடந்த போது ஒரு பெருந்தலைவனுக்கு கீழ் மிகப்பெரும் விடுதலைப் போரிலே ஒவ்வொரு பெண்ணினதும் தனித்துவமான ஆளுமை எல்லாத் துறைகளிலும் சம பங்காளிகளாக வந்துள்ளதை வரலாறு நிருபித்திருக்கின்றது.

யுத்தத்திற்கு பின்னரான காலப்பகுதியில் போதை வஸ்து என்ற அரக்கன் இந்த பெண்கள் மீதான வன்முறைகள் மற்றும் அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டிருக்கின்றது.

இவ்வாறான சீரழிவுகளுக்குள் தலை நிமிர்ந்து வாழுகின்ற இந்த காலகட்டத்தில் பெண்கள் மீதான மறைமுகமான சில வன்முறைகள் இப்போதும் இடம்பெறுகின்றன.

இனப்பிரச்சினை
நாடாளுமன்றத்தில் கூட பெண்கள் மீதான வன்முறைகள் இடம்பெற்று இருக்கின்றன என்பதை ஊடகங்கள் ஊடாக செய்திகள் வெளியாகி இருக்கின்றது.

இப்போது அதிபர் தேர்தல் பற்றியும் பேசப்படுகிறது அதிபர் தேர்தலில் போட்டியிடுகின்ற ஒரு வேட்பாளர் கூட இந்த மண்டபத்தில் ஒரு கூட்டத்தை நடத்திச் சென்று இருக்கின்றார் நீண்ட நெடுங்காலமாக கடந்த எட்டு சகாப்தங்களுக்கு மேலாக உறுதி தளராது தனது கொள்கை தளராது இனத்தினுடைய அடிப்படைக் கொள்கைகளை அடிநாதமாகக் கொண்டு தமிழினம் பயணித்து வருகின்றது.

இவ்வாறு அதிபர் தேர்தலில் போட்டியிடுகின்றவர்கள் யாராக இருந்தாலும் இனப்பிரச்சினைக்கான ஒரு தீர்வை முன் வையுங்கள் நாங்கள் அது பற்றி பரிசீலிப்போம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழர்கள் பொது வேட்பாளர் பற்றிய சிந்தனையையும் கொண்டுள்ளனர் தமிழ் மக்களின் அரசியல் தீர்வை எட்டுவதற்காக தமிழ் வாக்காளர்கள் ஒன்று திரண்டு ஒரு தமிழ் பொது வேட்பாளரை தீர்மானிக்க முனைந்தால் தென்பகுதியில் இருந்து எந்த ஒரு அதிபர் வேட்பாளரும் வெல்ல முடியாத மிகப்பெரும் சங்கடத்தை கொடுக்கும் அது பற்றி கூட தமிழர் தரப்பு மிக நுணுக்கமாக ஆராய்கின்றது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.