தற்காலிக குடியிருப்பு: கனேடிய அரசாங்கம் எடுத்துள்ள அதிரடி முடிவு
லம்பெயர்தலைக் கட்டுப்படுத்த தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகள் எடுத்துவரும் கனடா தனது வரலாற்றில் முதல்முறையாக குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையில் கட்டுப்பாடுகளை அமைக்க திட்டமிட்டுள்ளது.
கனடாவில் கல்வி கற்க வரும் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கைக்குக் கட்டுப்பாடு, அவர்கள் எவ்வளவு நேரம் வேலை செய்யலாம் என்பதற்குக் கட்டுப்பாடு என தொடர்ந்து புலம்பெயர்தல் தொடர்பில் கட்டுப்பாடுகள் விதித்து வந்த நிலையில் அடுத்ததாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
புலம்பெயர்பவர்களின் எண்ணிக்கை அடுத்த மூன்று ஆண்டுகளில் குறைக்கப்படும் என்றும், செப்டம்பர் மாதம் முதல் வரம்பு நிர்ணயிக்கப்படும் என்றும் கனேடிய குடிவரவு அமைச்சர் மார்க் மில்லர் தெரிவித்துள்ளார்.
கனடாவின் அதிரடி முடிவு
இது சர்வதேச மாணவர்களுக்கும், வெளிநாட்டு தொழிலாளர்கள் மற்றும் தஞ்சம் கோருபவர்களுக்கும் பொருந்தும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், கனடா தற்காலிக குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையை தற்போதைய 6.2% இலிருந்து 5% ஆக குறைக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
சமீபத்திய ஆண்டுகளில், கனடாவில் அனுமதிக்கப்பட்ட தற்காலிக குடியிருப்பாளர்களின் எண்ணிக்கை அதிகம்.
தற்காலிக குடியிருப்பாளர்கள்
இதற்கமைய 2024 ஆம் ஆண்டு நிலவரப்படி, கனடாவில் மொத்தம் 2.5 மில்லியன் தற்காலிக குடியிருப்பாளர்கள் இருப்பதாக தெரிவித்தார்.
தேசிய தரவு சேகரிப்பு நிறுவனமான புள்ளியியல் கனடாவின் புள்ளிவிவரங்களின்படி, இது 2021 இல் கிட்டத்தட்ட ஒரு மில்லியனாக இருந்தது.
தொழிலாளர் பற்றாக்குறையை நிரப்ப நாடு தற்காலிக வெளிநாட்டு ஊழியர்களை பெரிதும் நம்பியுள்ளது. போர் மற்றும் அரசியல் வழக்குகளில் இருந்து தப்பியோடி வருபவர்களை அனுமதிக்க சர்வதேசக் கடமைகளும் அதற்கு உண்டு.
கட்டுப்பாடு
இதற்கமைய, புதிய கொள்கையின் ஒரு பகுதியாக, சில கனேடிய வணிகங்கள் மே 1 ஆம் திகதிக்குள் தாங்கள் நம்பியிருக்கும் தற்காலிக வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும்.
இந்த விதியிலிருந்து மருத்துவப் பணியாளர்கள் மற்றும் கட்டுமானப்பணியாளர்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்படுகிறது. கட்டுமான மற்றும் சுகாதாரத் துறைகளில் உள்ள தொழிலாளர்கள் – இவை இரண்டும் கனடாவில் தொழிலாளர் பற்றாக்குறையை எதிர்கொள்கின்றன.
அதனால் இந்தத் தொழிலாளர்கள் குறைந்தபட்சம் ஓகஸ்ட் 31 வரைஇந்தப் பணியாளர்கள் மட்டும் இப்போது கனடாவுக்குள் அனுமதிக்கப்படும் அதே எண்ணிக்கையில் நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.