லண்டனில் 10,000 யானைகளை களமிறக்குவோம்… மிரட்டல் விடுக்கும் 6 நாடுகள்: வெடித்த விவகாரம்
பெருமைக்காக மிருகங்களை கொல்லும் கொடூரத்திற்கு எதிராக பிரித்தானியா முன்னெடுக்கும் நடவடிக்கையை எதிர்த்து, லண்டனில் 10,000 யானைகளை களமிறக்குவோம் என்று நாடொன்று கடும் மிரட்டல் விடுத்துள்ளது.
யானைகளுடன் வாழப்பழகுவார்கள்
ஆப்பிரிக்க நாட்டின் வனவிலங்கு அமைச்சர் Dumezweni Mthimkhulu தெரிவிக்கையில், பிரித்தானிய மக்கள் அப்படியேனும் யானைகளுடன் வாழப்பழகுவார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
வன விலங்குகளை பெருமைக்காக கொல்லும் பொருட்டு பிரித்தானியாவில் இருந்து ஆப்பிரிக்கா செல்வோருக்கு தடை விதிக்கும் விவகாரம் தொடர்பில் எம்.பிக்கள் விவாதிக்க முடிவு செய்துள்ளனர்.
தொடர்புடைய பிரேணைக்கு எதிராக போராடுவதற்காக போட்ஸ்வானா மற்றும் ஐந்து தென்னாப்பிரிக்க நாடுகளின் அதிகாரிகள் தரப்பு மற்றும் அரசியல்வாதிகள் குழு பிரித்தானியாவில் களமிறங்கியுள்ளனர்.
பெருமைக்காக யானைகளை வேட்டையாடுவதால், அதன் எண்ணிக்கை பெருமளவில் சரிவடையும் என்றும், இல்லை எனில் கட்டுப்பாட்டை மீறிவிடும் என்றும் ஆப்பிரிக்க நாடுகள் வாதிட்டுள்ளன.
இப்படியான வேட்டையாடுபவர்களை தடை செய்வதால் இறைச்சி, பணம் மற்றும் வேலைகளைப் பெறும் ஆப்பிரிக்க கிராமவாசிகள் வறுமைக்கு தள்ளப்படுவார்கள் என்றும் அமைச்சர் Dumezweni Mthimkhulu வாதிட்டுள்ளார்.
மக்கள் நடமாட்டத்தை விட
10,000 யானைகளை களமிறக்க தாம் தயார் என்றும், பிரித்தானிய அரசாங்கம் ஒப்புக்கொள்ளுமென்றால் அதிக மக்கள் பார்வையிடும் லண்டன் Hyde பூங்காவில் அந்த யானைகளை பாதுகாக்கட்டும் என்றார்.
யானைகளுடனான வாழ்க்கை எவ்வளவு கொடூரம் என்பதை பிரித்தானிய மக்கள் உணர வேண்டும். சில பகுதிகளில் மக்கள் நடமாட்டத்தை விட யானைகளே அதிகம். அவைகள் சிறார்களை கொல்கின்றன.
அவைகள் விவசாயிகளின் பயிர்களை சேதப்படுத்தி உணவாக்குகின்றன, இதனால் ஆப்பிரிக்க மக்கள் பசியுடன் இருக்கிறார்கள். மக்களுக்கு போதுமான குடிநீர் கிடைப்பதில்லை, மனிதர்கள் மீதிருந்த பயம் யானைகளிடம் தற்போது இல்லை என்றும் அமைச்சர் Dumezweni Mthimkhulu தெரிவித்துள்ளார்.