இளவரசி கேட் இல்லாவிட்டால் ராஜ குடும்பம் அவ்வளவுதான்… டயானாவின் பட்லர் கூறுகிறார்
இளவரசி கேட் இல்லாவிட்டால், அவ்வளவுதான், ராஜ குடும்பத்தின் கதை முடிந்தது என்கிறார் இளவரசி டயானாவின் பட்லர்.
இளவரசி கேட் எங்கே?
இளவரசி கேட் எங்கே என்னும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற இளவரசி டயானாவின் பட்லரான பால் பர்ரலிடம், இளவரசி கேட் மாயமானது தொடர்பான வதந்திகள் குறித்து கேள்வி எழுப்பபட்டது.
அப்போது பேசிய பால், இளவரசி கேட் இல்லாவிட்டால் ராஜ குடும்பம் சிதைந்துபோகும் என்று கூறினார். இளவரசி கேட் தொடர்பில் பரவிவரும் வதந்திகள் குறித்து பேசிய அவர், இளவரசர் வில்லியமும், இளவரசி கேட்டும், இந்த பிரச்சினையிலிருந்து விடுபடவேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்றார்.
வேல்ஸ் இளவரசர் வீட்டில் எல்லாம் நன்றாகத்தான் நடக்கிறது என்பதை அவர்கள் இந்த உலகுக்குக் காட்டவேண்டும் என்றும், அவர்கள்தான் எதிர்காலத்திற்கான நமது நம்பிக்கை, ஆகவே, அவர்கள் முன்னேறிச்செல்லவேண்டும் என்றும் தான் விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார். அவர்கள் அவர்கள் இல்லையென்றால், குறிப்பாக, இளவரசி கேட் இல்லையென்றால், ராஜ குடும்பம் அவ்வளவுதான் என்கிறார் பால் பர்ரல்.