;
Athirady Tamil News

நிலவில் ரயில் போக்குவரத்தினை அறிவித்த நாடு

0

அமெரிக்கா நிலவில் ரயில் போக்குவரத்து அமைப்பை உருவாக்க ஒப்பந்தம் செய்துள்ளது.

ரயில் போக்குவரத்து
அமெரிக்காவில் மேம்பட்ட தொழில்நுட்பத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு உருவாக்கப்பட்ட அமைப்பு DARPA.

அதாவது, பாதுகாப்பு மேம்பட்ட ஆராய்ச்சி திட்ட முகமை என்பது இதன் விரிவாக்கம் ஆகும். அப்பல்லோ திட்டத்தின் மூலம் மனிதரை நிலவுக்கு கொண்டு செல்ல உதவிய பல தொழில்நுட்பங்களின் உந்து சக்தியாக இந்த DARPA அமைப்பு இருந்துள்ளது.

இந்த நிலையில் DARPA அடுத்தகட்ட பாய்ச்சலுக்கு அச்சாரமிட்டுள்ளது. நார்த்ரோப் க்ரம்மன் எனும் நிறுவனத்துடன் நிலவில் ரயில் போக்குவரத்து அமைப்பை உருவாக்குவதற்கான ஒரு கருத்தை உருவாக்குவதற்கும், அதை முன்னெடுத்து செல்லவும் DARPA ஒப்பந்தம் செய்துள்ளது.

விண்வெளி பொருளாதாரம்
இத்திட்டத்தின் மூலம் மனிதர்கள், பொருட்கள் மற்றும் வளங்களை சந்திர மேற்பரப்பின் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்ல பயன்படுத்தலாம் என அமெரிக்கா கூறியுள்ளது.

அத்துடன் வளர்ந்து வரும் அமெரிக்காவின் விண்வெளி பொருளாதாரத்திற்கு பங்களிக்க முடியும். இதற்காக நார்த்ரோப் க்ரம்மன் நிறுவனம் புதிய ஆய்வை மேற்கொள்கிறது.

முதலில் நிலவில் ரயில் அமைப்பு உருவாக்க தேவைப்படும் இடைமுகங்கள் மற்றும் வளங்களை வரையறுக்க வேண்டும்.

பின்னர், அது எதிர்பார்க்கக்கூடிய செலவு,. தொழில்நுட்ப மற்றும் தளவாட அபாயங்களின் பட்டியலையும் அந்நிறுவனம் தயார் செய்ய வேண்டும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.