இலங்கையில் மக்களிடையே பரவி வரும் ஒரு வகையான கொடிய நோய்… வைத்தியர் எச்சரிக்கை!
நாட்டில் உள்ள மக்களிடையே டினியா எனப்படும் ஒரு வகையான தோல் நோய் பரவி வருவதாக வைத்தியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போது நாட்டில் நிலவும் அதிகமான வெப்பநிலைக் காரணமாக குறித்த தோல் நோய் ஏற்படுவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தோல் நோய் தொடர்பான வைத்திய நிபுணர் ஜானக அகரவிட்ட தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்றையதினம் (22-03-2024) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே வைத்திய நிபுணர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பெரியவர்கள் மற்றும் சிறுவர்கள் இடையே இந்த நோய் பரவி வருவதாகவும், தோலில் அரிப்பு ஏற்படுவதே இதன் பிரதான அறிகுறியாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, இவ்வாறான நோய் அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக வைத்திய ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளுமாறும் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தோல் நோய் தொடர்பான வைத்திய நிபுணர் ஜானக அகரவிட்ட வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, தற்போது நிலவும் வறட்சியான காலநிலையினால் இளநீரின் விலை அதிகரித்துள்ளது.
இளநீருக்கான தேவை அதிகரிப்பு மற்றும் உற்பத்தி செய்யும் விகிதம் குறைவடைந்துள்ளமை போன்ற காரணங்களினால் விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 100 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட இளநீர் தற்போது 180 ரூபாய் முதல் 250 ரூபாவிற்கு இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக நுகர்வோர் குற்றம் சுமத்துகின்றனர்.