சீனாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள தினேஷ் குணவர்த்தன
சீனாவுக்கான விஜயம் ஒன்றை பிரதமர் தினேஷ் குணவர்த்தன மேற்கொள்ளவுள்ளதாக சீன வெளிவிவகார அமைச்சை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த நாட்டுப் பிரதமரின் அழைப்பின் பேரிலேயே எதிர்வரும் 25ஆம் திகதி (25.03.2024) முதல் 30ஆம் திகதி வரை கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வெளிநாட்டுக் கடன்
குறித்த விஜயத்தின்போது பலதரப்பட்ட தரப்பினரை சந்திக்கவுள்ளதுடன் சீனாவுடனான கடன் மறுசீரமைப்பு தொடர்பில் கலந்துரையாடப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இலங்கை செலுத்த வேண்டிய மொத்த வெளிநாட்டுக் கடனில் சீனாவுக்கு 10 சதவீதத்தை கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.