கஞ்சா செடி வளர்ப்பு தொடர்பில் ஜேர்மனி எடுத்துள்ள முடிவு: கொண்டாடும் ஒரு கூட்டம்
ஜேர்மன் அரசு, வயது வந்த ஜேர்மானியர்கள், தங்கள் வீடுகளில் மூன்று கஞ்சா செடிகள் வரை வளர்க்கவும், 50 கிராம் கஞ்சா வைத்திருக்கவும் அனுமதிக்கும் சட்ட வரைவு ஒன்றை பிப்ரவரி மாதம் 23ஆம் திகதி நிறைவேற்றியது.
நேற்று, அதாவது, மார்ச் 21ஆம் திகதி, வெள்ளிக்கிழமை, ஷோல்ஸ் அரசின் இந்த சட்டத்திற்கு நாடாளுமன்றத்தின் மேலவை ஒப்புதலளித்துள்ளது.
கொண்டாடும் ஒரு கூட்டம்
இந்த செய்தி கஞ்சா வளர்ப்பில் ஆர்வம் கொண்ட ஜேர்மானியர்கள் பலருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Dirk Rehahn என்பவர், இந்த செய்தி வெளியானதிலிருந்து தனது இணையதளங்களைப் பார்வையிடுவோரின் எண்ணிக்கை எக்கச்சக்கமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கிறார்.
Dirk, கஞ்சா வளர்ப்புக்கு உதவும் பல்வேறு உபகரணங்களை விற்பனை செய்துவருகிறார். கஞ்சா வளர்ப்புக்கு அரசு அனுமதியளித்ததைத் தொடர்ந்து, அவர் வைத்திருந்த சில உபகரணங்கள் அனைத்தும் முழுமையாக விற்றுத்தீர்ந்துவிட்டனவாம்.
விடயம் என்னவென்றால், கஞ்சா வளர்ப்பது தொடர்பாக ஆலோசனை வழங்கியதற்காக, Dirk சில ஆண்டுகளுக்கு முன் கைது செய்யப்பட்டு, இரண்டு ஆண்டுகள் சிறையில் செலவிட நேர்ந்தது.