இளவரசி கேட்டுக்கு புற்றுநோய்… மாறும் சூழல்; மன்னிப்புக் கேட்கும் பிரபலங்கள்
பிரித்தானிய இளவரசி பொதுவெளியில் தலைகாட்டாததையடுத்து கடந்த சில வாரங்களாக பிரித்தானியாவில் மட்டுமின்றி, அமெரிக்கா முதலான நாடுகளிலும் அதைக் குறித்த வதந்திகள் பரவத்துவங்கின. பிரபலங்கள் பலர் இளவரசியை கேலி செய்யும் விதத்தில் கருத்துக்களைக் கூறினர்.
மாறும் சூழல்
இந்நிலையில், தனக்கு புற்றுநோய் கண்டறியப்பட்டுள்ளதாகவும், தான் சிகிச்சையிலிருப்பதாகவும் கூறும் வீடியோ ஒன்றை வெளியிட்டார் கேட்.
அந்த செய்தி வெளியானதைத் தொடர்ந்து, இளவரசியின் ரசிகர்கள் மட்டுமின்றி அவரை விமர்சித்துவந்தவர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர். தற்போது ஒவ்வொருவராக, தாங்கள் இளவரசி கேட்டை விமர்சித்ததற்காக மன்னிப்புக் கேட்டு வருகிறார்கள்.
இளவரசியை விமர்சித்திருந்த பிரபல ஹாலிவுட் நடிகையான Blake Lively என்பவர், இளவரசியின் எடிட் செய்யப்பட்ட புகைப்படம் தொடர்பில் முட்டாள்தனமாக விமர்சனம் தெரிவித்துவிட்டேன், இன்று அதே விமர்சனத்தை நானே பார்க்கும்போது, அது என்னை மோசமாக உணரவைத்துவிட்டது, என்னை மன்னித்துவிடுங்கள், நான் இளவரசிக்கு என் அன்பையும் நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறென் என்று கூறியுள்ளார்.
அதேபோல, Owen Jones என்னும் பிரபல அரசியல் விமர்சகரும் இளவரசியை கேலி செய்திருந்தார். இளவரசிக்கு இவ்வளவு பயங்கரமான ஒரு உடல் நல பாதிப்பு என்பதை உணராமல், யோசிக்காமல் பேசிவிட்டேன், அதற்காக வெட்கப்படுகிறேன் என்று தற்போது கூறியுள்ளார் அவர்.