புங்குடுதீவில் திட்டமிட்ட விபத்து மூலம் கொலை?
புங்குடுதீவில் திட்டமிட்ட விபத்து மூலம் கொலை?
புங்குடுதீவில் உயிரோடு நாயை வெட்டி காணொளி வெளியிட்ட கும்பல் மீண்டும் அராஜகங்களில் ஈடுபட்டு வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த வருடம் நாய் ஒன்றினை உயிரோடு கொடூரமாக துன்புறுத்தி வெட்டி கொன்று ரிக்ரொக் வலைத்தளத்தில் காணொளியாக வெளியிட்ட தொடர்பாக புங்குடுதீவு வல்லன் கிராமத்தினை சேர்ந்த சில நபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
மேற்படி குற்றத்திற்காக குறைந்தபட்சம் இரண்டு வருட கடூழிய சிறைத்தண்டனை இலங்கையில் விதிக்கப்படுகின்ற போதிலும் மேற்குறித்த நபர்கள் 14 நாட்கள் மாத்திரமே விளக்கமறியலில் வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டிருந்தனர்.
போதைப்பொருள் பாவனைக்காக இறைச்சிக்காக மாடுகளை கொன்று விற்பனை செய்வதாகவும் அதற்கு இடையூறாக விளங்கியதாலேயே நாய்களை கொன்றதாகவும் அவர்கள் நீதிமன்றில் குறிப்பிட்டிருந்த போதிலும் மிகக்குறுகிய நாட்களில் அக்குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டிருந்தமை தொடர்பாக பொதுமக்கள் மத்தியில் கடும் விமர்னசங்கள் எழுந்திருந்தன.
குறைந்தபட்சம் இவ்வாறான நபர்களை ஏன் மனநல வைத்தியசாலைக்கு அனுப்பி சிகிச்சை வழங்கவில்லையென்றும் பொதுமக்கள் குரலெழுப்பியிருந்தனர்.
அதன்பின்னர் இன்னும் மோசமான குற்றங்களில் இக்கும்பல் புங்குடுதீவில் மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பாக மாடுகளை வகைதொகையின்றி அழித்து விற்பனை செய்வதாகவும் அப்பணத்தில் போதைப்பொருட்களை பயன்படுத்தி பொதுமக்களை வாள்முனையில் அச்சுறுத்தி வந்ததாகவும்
சிலதினங்களுக்கு முன்பு புங்குடுதீவு ஆலடி சந்தியிலுள்ள கலட்டி விநாயகர் ஆலயத்தின் சுவாமி வீதி உலாவின் போதும் நிறைவெறியில் மோட்டார் சைக்கிளை செலுத்தி திருவிழாவுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு விளைவித்ததாகவும்
அன்றைய தினமே புங்குடுதீவு பத்தாம் வட்டாரம் இராஜேஸ்வரி பாடசாலை அருகில் 45 வயது மதிக்கத்தக்க சின்னகுஞ்சு என்றழைக்கப்படுகின்ற நபர் மீது இக்கும்பலை சேர்ந்த நபர்கள் மோட்டார் சைக்கிளால் மோதியதோடு கூரிய ஆயுதங்களால் தாக்கியதாகவும் சற்றுமுன்னர் சின்னகுஞ்சு என்றழைக்கப்படுகின்ற நபர் யாழ் போதனா வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இக்கும்பலை தேடி பொலிசார் வலைவிரித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன .
தகவல்.. -“புங்கையூரான்”