கேட் மிடில்டனின் துணிச்சலை பாராட்டுகின்றேன்: இளவரசி டயானாவின் சகோதரர் பெருமிதம்
பிரித்தானிய இளவரசி கேட் மிடில்டன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதை அறிவித்துள்ள நிலையில், அவரது நம்பமுடியாத துணிச்சலை இளவரசி டயானாவின் சகோதரர் பாராட்டியுள்ளார்.
42 வயதான கேட் மிடில்டன் நேற்றுமுன் தினம் காணொளி ஒன்றை வெளியிட்டு, தாம் புற்றுநோய்க்கான சிகிச்சையை முன்னெடுப்பதாக அறிவித்தார்.
வயிற்றுக்கான அறுவை சிகிச்சையின் போது புற்றுநோய் பாதிப்பு உறுதி செய்ததையும் அவர் குறித்த காணொளியில் குறிப்பிட்டுள்ளார்.
சார்லஸ் ஸ்பென்சர் கருத்து
இந்நிலையில் கேட் மிடில்டனின் காணொளி தொடர்பில் தற்போது இளவரசி டயானாவின் சகோதரர் ஏர்ல் சார்லஸ் ஸ்பென்சர் தமது கருத்தை பதிவு செய்துள்ளார்.
”அதில் நம்பமுடியாத துணிச்சல் மற்றும் எதிர்கொள்ளும் மனநிலை என்றும் குறுப்பிட்டுள்ளார்”
ஜனவரி மாதம் வயிற்றுக்கான அறுவை சிகிச்சை முன்னெடுக்கப்பட்ட பின்னர், கேட் மிடில்டன் எந்த ஒரு பொது நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளவில்லை.
அது மட்டுமின்றி, ஈஸ்டர் பண்டிகை முடியும் வரைஅவர் ஓய்வெடுக்க இருக்கிறார் என்றே அரண்மனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சார்லஸ் மன்னரும் தற்போது புற்றுநோய் சிகிச்சையில் உள்ளார். நோய் பாதிப்பு தொடர்பில் கேட் மிடில்டன் வெளிப்படையாக அறிவித்துள்ளதை வெகுவாக பாராட்டியுள்ள சார்லஸ் மன்னர், தாம் பெருமை கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.