யாழில் சட்டவிரோதமாக பனை மர குற்றிகளை ஏற்றிச் சென்றவர் கைது
யாழ்ப்பாணம் – கோண்டாவில் பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி வாகனத்தில் பனை மர குற்றிகளை ஏற்றிச் சென்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (23) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது இரண்டு லட்சம் ரூபாய் பெறுமதியான 55 பனை மரக் குற்றிகள் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது.
சட்ட நடவடிக்கை
யாழ்ப்பாண பிராந்திய புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் சட்ட நடவடிக்கைக்காக கோப்பாய் காவல் நிலையத்தில் ஒப்படைக்கபட்டுள்ளார்.