தமிழர் பகுதியில் அதிகாலை இடம்பெற்ற பரபரப்பு சம்பவம்: கவலையில் மக்கள்!
திருகோணமலையில் உள்ள சீனன்வெளி கிராமத்திற்குள் உட்பகுந்த காட்டு யானைகள் சேதம் விளைவித்துள்ளதாக பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவம் இன்று (24-03-2024) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தின் போது, அரிசி ஆலையையும் உடைத்து அங்குள்ள உடைமைகளை சேதம் விளைவித்து அங்குள்ள நெல் முறைகளையும் சாப்பிட்டுச் சென்றுள்ளதாக வீட்டு உரிமையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
தாம் பல லட்சம் ரூபாய் செலவிட்டு கட்டிய வீட்டினையும் அரிசி ஆலையையும் காட்டு யானைகள் உடைத்துள்ளமையால் தாம் நஷ்டம் அடைந்துள்ளதாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.
காட்டுயானையின் அச்சுறுத்தலால் இரவு வேளையில் அச்சத்துடன் இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.
இவ் விடயத்தில் உரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு தமக்கான நஷ்ட ஈட்டினை பெற்றுத்தருவதோடு, யானை பாதுகாப்பு வேலியையும் அமைத்துத் தருமாறு சீனன்வெளி கிராம மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.