பிரித்தானிய அரசின் முடிக்குரிய மன்னன் யார்…மர்மங்களை அவிழ்க்கும் நோஸ்ட்ராடோமஸின் ஆரூடம்
வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் மற்றும் சார்லஸ் மன்னர் ஆகியோரின் புற்றுநோய் பாதிப்பு குறித்து அறிவிக்கப்பட்டு அவர்களுக்கான சிகிச்சை முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், 15ம் நூற்றாண்டின் நோஸ்ட்ராடோமஸின் கணிப்புகள் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
பிரித்தானியாவின் ராணி இரண்டாம் எலிசபெத்தின் மரணம், ஜப்பான் மீதான அணுகுண்டு வீச்சு உட்பட பல்வேறு சம்பவங்களை நுணுக்கமாக கணித்துள்ள நோஸ்ட்ராடோமஸ், பிரித்தானிய அரச குடும்பத்தில் 2024ஆம் ஆண்டில் நெருக்கடி ஏற்படும் என்பதையும் கணித்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரித்தானியாவில் மன்னர் ஒருவர் பதவி துறப்பார் என்றும், மன்னராக பொறுப்பேற்க வேண்டியவர் இக்கட்டான நிலையில் விலகுவதால், மன்னருக்கான வாய்ப்பே இல்லாத ஒருவர் எவரும் எதிர்பாராமல் மன்னராவார் என்றும் நோஸ்ட்ராடோமஸ் கணித்துள்ளார்.
சார்லஸ் பதவி விலகலாம்
தற்போதைய சூழலில் இது சார்லஸ் மன்னர் மற்றும் இளவரசர் ஹரிக்கு பொருந்துவதாக நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர், அதற்கேற்றாற்போல் சார்லஸ் மன்னரும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சையில் உள்ளார்.
இந்த நிலையில், தாமாக முன்வந்து அல்லது அவரது உடல்நிலை தொடர்பான அழுத்தம் காரணமாக மன்னர் சார்லஸ் பதவி விலகலாம் என்று நிபுணர்கள் தரப்பு கணித்துள்ளது.
ஆனால், அரச குடும்பத்து கடமைகளில் கொஞ்சமும் ஆர்வமில்லாத இளவரசர் ஹரி எவ்வாறு மன்னராக பொறுப்புக்கு வருவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
நாடு திரும்ப உத்தரவு
இதனிடையே, தற்கால நோஸ்ட்ராடோமஸ் என அறியப்படும் ஏதோஸ் சலோம் (Athos Salome) வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டனின் உடல்நலம் தொடர்பில் வெளியிட்டிருந்த கணிப்புகளும் கவனம் பெறத் தொடங்கியுள்ளது.
எதிர்வரும் ஆண்டில் எலும்பு, முழங்கால், கால் மற்றும் மூட்டு பிரச்சினைகளால் இளவரசி கேட் மிகவும் அவதிப்படுவார் என்றும் சவால்களை எதிர்கொள்ளும் நிலை ஏற்படும் என்றும் அவர் கணித்துள்ளார்.
இந்த நிலையிலே, வேல்ஸ் இளவரசர் வில்லியம் தமது சகோதரர் ஹரியை நாடு திரும்புமாறு பணித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.