கேட் மிடில்டனின் அறிவிப்பு… நொறுங்கிப்போன 8 வயது சிறுமி: சொன்ன காரணம்
வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டனின் புற்றுநோய் தொடர்பான அறிவிப்பு , அதே நோயில் இருந்து மீண்ட ஒரு 8 வயது சிறுமியை கலங்கடித்துள்ளது.
ஊக்கப்படுத்தியவர் கேட் மிடில்டன்
குறித்த சிறுமியை நோயில் இருந்து மீண்டு வருவாய் என ஊக்கப்படுத்தியவர் கேட் மிடில்டன் தான் என்பதாலையே, இந்த தகவல் சிறுமியை நொறுங்க வைத்துள்ளது.
Mila Sneddon தமக்கு 5 வயதாக இருக்கும் போது புற்றுநோய் சிகிச்சையின் ஒருபகுதியாக கீமோ சிகிசை முன்னெடுத்துள்ளார். மட்டுமின்றி, கொரோனா நாட்களின் போது சமையலறை ஜன்னல் வழியாக தனது தந்தையை முத்தமிடும் சிறுமி Mila Sneddon-ன் புகைப்படம் ஒன்று கேட் மிடில்டன் வெளியிட்ட தொகுப்பில் இடம்பெற்றிருந்தது.
புற்றுநோயுடன் போராடும் தமது மகளுக்கு கோவிட் பாதிப்பு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதால், வீட்டில் இருந்தே வெளியேறி வேலைக்கு சென்றவர் ஸ்காட். 2021ல் மிலா ஸ்னெடன் தொடர்பில் பரிவான வார்த்தைகளை கேட் மிடில்டன் பதிவு செய்திருந்தார்.
மிகவும் வருத்தமுடன்
நேரில் சந்தித்த போது, மாஸ்க் அணிந்து கொண்டே கேட் மிடில்டன் மிலா ஸ்னெடனுடன் அளவளாவினார். தற்போது கேட் மிடில்டன் தமது நிலை குறித்து வெளிப்படுத்தியபோது, மிலா ஸ்னெடனின் தாயார் லிண்டா சமூக ஊடக பக்கத்தில் கலக்கத்துடன் பதிவிட்டுள்ளார்.
கேட் தொடர்பில் தெரியவந்த தகவல் நொறுங்க வைப்பதாக உள்ளது என அதில் குறிப்பிட்டுள்ளார். மிலா மிகவும் வருத்தமுடன் இருப்பதாகவும், அவர் பாணியில் தனிப்பட்ட முறையில் கேட் மிடில்டனை அவர் தொடர்பு கொள்வார் என்றும் லிண்டா குறிப்பிட்டுள்ளார்.