கேட் மிடில்டனின் அறிவிப்புக்கு முன்னர் சார்லஸ் மன்னரின் உணர்ச்சி வசப்பட்ட செயல்
இளவரசி கேட் மிடில்டன் தமது புற்றுநோய் தொடர்பான தகவலை வெளிப்படையாக அறிவிக்கும் முன்னர் சார்லஸ் மன்னருடன் தனிப்பட்ட முறையில் கலந்தாலோசித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
விண்ட்சர் மாளிகைக்கு
வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டனுடன் உணவருந்தும் பொருட்டு சார்லஸ் மன்னர் லண்டனில் இருந்து விண்ட்சர் மாளிகைக்கு பயணப்பட்டதாகவும், அங்கே உணர்ச்சி வசப்பட்ட சார்லஸ் மன்னர் தமது போராட்டம் குறித்தும் பேசியதாக கூறப்படுகிறது.
ஆண்டு பிறந்த சில மாதங்களிலேயே பிரித்தானிய அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் இருவர் புற்றுநோய் சிகிச்சையை முன்னெடுக்கத் தொடங்கியுள்ளனர். இருவரும் தங்கள் போராட்டம் தொடர்பில் நிறைய பகிர்ந்துகொள்ளவும், ஒருவருக்கொருவர் தேற்றவும் அந்த சந்திப்பு வாய்ப்பாக அமைந்திருக்கும் என்றே கூறப்படுகிறது.
இருவரும் ஒன்றாக அமர்ந்து பேசிக்கொள்வது மிகவும் அசாதாரணமானது. மட்டுமின்றி, சார்லஸ் மன்னர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு மதிய உணவை முடித்து வெளியேறினார் என்றே தகவல் கசிந்துள்ளது.
பிப்ரவரி தொடக்கத்தில் இருந்தே சார்லஸ் மன்னர் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.