பாரிய நிதி மோசடி : தென்னை சாகுபடி வாரியத்தின் முன்னாள் பொது முகாமையாளர் கைது
தென்னை சாகுபடி வாரியத்தின் முன்னாள் பொது முகாமையாளர் நிதி மோசடி செய்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அதன்படி அவர், ஊழியர்களின் எதிர்கால வைப்பு நிதியில் இருந்து 77 மில்லியன் ரூபாயினை எடுத்து மோசடி செய்த குற்றச்சாட்டிலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.
தெல்கொட பகுதியைச் சேர்ந்த 64 வயதான குறித்த சந்தேக நபர் தற்போது குற்றப்புலனாய்வு காவல்துறையினரின் காவலில் உள்ளதாக காவல்துறை உயர் அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலதிக விசாரணை
ஊழியர்களின் எதிர்கால வைப்பு நிதியில் இருந்து சுமார் 77,722,691 ரூபாயை அவர் முறைகேடாகப் பயன்படுத்தியதாக அவர் மீது முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்தே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை (22) கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளவரிடம் மேலதிக விசாரணைகளை குற்றப்புலனாய்வுப்பிரிவினர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.