அங்கு தாக்குதல் நடத்துவது மிகப்பெரிய தவறு! இஸ்ரேலுக்கு அமெரிக்க துணை ஜனாதிபதி வலியுறுத்தல்
பாலத்தீனிய நகரமான ரபா மீது தாக்குதல் நடத்தும் திட்டத்தை கைவிட வேண்டும் என இஸ்ரேல் பிரதமருக்கு அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து சமீபத்தில் ஊடகம் ஒன்றிற்கு துணை ஜனாதிபதி அளித்த பேட்டியில் கூறியதாவது,
ரபா நகருக்குள் முன்னேறி தாக்குதலை தொடங்கினால், இஸ்ரேலுக்கு கடுமையான விளைவுகள் ஏற்படும். இதை நான் மறுக்கவில்லை. தாக்குதல் நடத்தப்படவேண்டுமா, இல்லையா? என்பதிலும் எங்கள் கண்ணோட்டம் தெளிவாக உள்ளது.
ரபா நகரில் எந்த ஒரு பெரிய ராணுவ நடவடிக்கை மேற்கொண்டாலும் அது மிகப்பெரிய தவறு.
வரைபடங்களை பார்த்தேன். அங்குள்ள (ரபா) மக்கள் செல்ல எங்கும் வழி இல்லை. ரபாவில் உள்ள சுமார் ஒன்றரை மில்லியன் மக்களின் பாதுகாப்பை நாங்கள் பார்க்கிறோம்.
ஏனெனில் அவர்களை அங்குதான் போகச் சொன்னார்கள். இவ்வாறு அமெரிக்க துணை பிரதமர் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.