40 மில்லியன் பிரித்தானிய வாக்காளர்களின் மொத்த தரவுகளும் சீனாவிடம்: வெளிவரும் பகீர் பின்னணி
சீன ஹேக்கர்களால் பிரித்தானிய வாக்காளர்கள் 40 மில்லியன் பேர்களின் மொத்த தரவுகளும் திருடப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
சைபர் தாக்குதலின் மூளை
கடந்த 2021ல் பிரித்தானிய தேர்தல் ஆணையம் மீது நடந்த சைபர் தாக்குதலின் மூளையாக செயல்பட்டது சீனா என்றே குற்றச்சாட்டு முன்வைக்கப்பட உள்ளது. அத்துடன், இந்த விவகாரத்தில் சீனாவின் பங்கை பகிரங்கப்படுத்தி, பாராளுமன்றத்தில் விவாதிக்கவும் முடிவாகியுள்ளது.
சீன ஹேக்கர்களால் அரசியல்வாதிகள் குறிவைக்கப்பட்டுள்ளனர் என்று துணைப் பிரதமர் ஆலிவர் டவுடன் டசின் கணக்கானவர்களை எச்சரிக்க இருக்கிறார். மேலும் வெளிவிவகாரத்துறை அலுவலகமானது பல சீன சந்தேக நபர்களை உத்தியோகபூர்வ தடுப்புப்பட்டியலில் சேர்க்க இருக்கிறது.
குற்றச்சாட்டை முன்வைக்கும்
அத்துடன், அமெரிக்காவும் இதுபோன்ற சைபர் தாக்குதல் தொடர்பாக சீனா மீது குற்றச்சாட்டை முன்வைக்கும் என்றே தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் பிரித்தானியாவில் சைபர் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த விவகாரம் தொடர்பில் இன்று சீனா மீது உத்தியோகப்பூர்வமாக பிரித்தானியா குற்றச்சாட்டை முன்வைக்க இருக்கிறது.