பால் மா மற்றும் பால் தேநீர் விலை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு
மக்களின் வாழ்க்கை செலவுக்கு மத்தியில் குறைக்கப்பட்ட பால்மாவின் விலை போதுமானதல்ல என்று நுகர்வோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இதேவேளை பால்மாவின் விலை குறைக்கப்பட்டுள்ளமையை அடுத்து பால் தேநீரின் விலையை 80 ரூபாய் வரை குறைக்குமாறு தேசிய பாவனையாளர் முன்னணியினர் உணவக உரிமையாளர்களிடம் கோரியுள்ளனர்.
இலங்கை ரூபாவின் பெறுமதி
இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் நிறையுடைய பால் மா பொதியொன்றின் விலை 150 ரூபாவினாலும் 400 கிராம் நிறையுடைய பால் மா பொதியொன்றின் விலை 60 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்மானம் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்துள்ளதன் காரணமாக எடுக்கப்பட்டுள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.