பெங்களூரு தண்ணீர் பஞ்சம்: குடிநீரில் காரை கழுவிய குடும்பங்கள் – அதிகாரிகள் அதிரடி!
அத்தியாவசியமற்ற பணிகளுக்கு குடிநீரை பயன்படுத்திய 22 குடும்பங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது
குடிநீர் தட்டுப்பாடு
கர்நாடகா மாநிலம் பெங்களூரு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில், வறட்சி காரணமாக, தண்ணீருக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் பல்வேறு ஐ.டி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை,
வீட்டிலிருந்தே வேலை செய்யும்படி அறிவுறுத்தியுள்ளது. மேலும், நகரவாசிகள் ஒரு முறை பயன்படுத்தும் தட்டில் சாப்பிடுவதும், மால்களில் கழிப்பறைகளைப் பயன்படுத்துவதும் போன்ற நெருக்கடியில் இருந்த வருகின்றனர்.
அபராதம் விதிப்பு
இதனால் குடிநீரை வீணாக்கக் கூடாது என்றும், மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் கர்நாடக அரசு எச்சரித்திருந்தது. இந்நிலையில் கார்களை கழுவுதல், தோட்டத்திற்கு நீர் பாய்ச்சுதல் போன்ற அத்தியாவசியமற்ற பணிகளுக்கு குடிநீரை பயன்படுத்திய 22 குடும்பங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த குடும்பங்களிடம் இருந்து, ரூ. 1.1 லட்சமும், அதிகபட்சமாக பெங்களூரின் தெற்கு பகுதியில், ரூ. 80,000 வசூலிக்கப்பட்டதாக பெங்களூரு நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் தெரிவித்துள்ளது.