இஸ்ரேலை கைவிட்ட அமெரிக்கா: திணறும் நெதன்யாகு
ஐநாவில் போர் நிறுத்த தீர்மானத்துக்கான வாக்கெடுப்பில் அமெரிக்கா வாக்களிக்காமல் போனதை தொடர்ந்து அமெரிக்கா, இஸ்ரேலை கைவிட்டதாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
உலக நாடுகள் பலவும் வலியுறுத்திவந்த நீண்ட காலமாக நிறைவேற்றப்படாமல் இருந்த போர் நிறுத்தத் தீர்மானம் நேற்று முன்தினம் நிறைவேற்றப்பட்டது.
ஐநா வாக்கெடுப்பு
அதில், அமெரிக்காவை தவிர யு.என்.எஸ்.சி-ல் மொத்தமுள்ள 15 நாடுகளில் 12 நாடுகளின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த வாக்கெடுப்பில், அமெரிக்கா தனது கொள்கையை நேற்று நடந்த ஐநா வாக்கெடுப்பின்போது கைவிட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் நிலைப்பாடு
சில நாள்களுக்கு முன்பு பிணைக்கைதிகள் விடுதலை தொடர்புடைய பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானத்தை அமெரிக்கா வரவேற்றது.சீனா மற்றும் ரஷ்யா அதனை வீட்டோ அதிகாரம் கொண்டு தடுத்தன.
அத்தோடு, போரின் ஆரம்பம் முதல் அமெரிக்கா கொண்டிருந்த நிலைப்பாட்டில் இருந்து விலகியதை இது தெளிவாக உணர்த்துகிறதாகவும் இஸ்ரேல் சுட்டிக்காட்டியுள்ளது.