ஈஸ்டர் சேவையில் பிரித்தானிய மன்னர் சார்லஸ்! கேட் மிடில்டன் கலந்து கொள்வாரா?
இந்தாண்டின் வின்ட்சரில் நடைபெறும் ஈஸ்டர் சேவையில் பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸ் கலந்து கொள்ள உள்ளார்.
ஈஸ்டர் சேவையில் பிரித்தானிய மன்னர் சார்லஸ்
ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை அன்று வின்ட்சர் கோட்டையில் (Windsor Castle) உள்ள செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்தில்(St George’s Chapel) நடைபெறும் ஈஸ்டர் மேட்டின் சேவையில்(Easter Mattins Service) பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸ் கலந்து கொள்வார் என்று பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது.
புற்றுநோய் பாதிப்பு அறிவிப்புக்கு பிறகு பிரித்தானிய மன்னர் கலந்து கொள்ளும் விழாவாக இது அமைந்துள்ளது.
இந்த விழாவில் பிரித்தானிய ராணி கமீலா, மற்றும் பிற ராயல் குடும்பத்தினரும் கலந்து கொள்ள உள்ளனர்.
கேட் மிடில்டன், இளவரசர் வில்லியம் பங்கேற்கவில்லை
வின்ட்சர் கோட்டையில் செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்தில் நடைபெறும் இந்த ஈஸ்டர் சேவையில் பிரித்தானிய இளவரசர் வில்லியம், அவரது மனைவி இளவரசி கேட் மிடில்டன், மற்றும் அவர்களது குழந்தைகள் இளவரசர் ஜார்ஜ், இளவரசி சார்லோட் மற்றும் இளவரசர் லூயிஸ் கலந்து கொள்ள மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளவரசி கேட் மிடில்டனின் புற்றுநோய் அறிவிப்பு வெளியான பிறகு, இளவரசர் வில்லியம் தன் குடும்பத்துடன் தனிமையை நாடிச் செல்ல இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.