;
Athirady Tamil News

ரூ.583.48 கோடி சொத்து மதிப்பு! தமிழ்நாட்டின் பணக்கார வேட்பாளர் யார் தெரியுமா?

0

இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் சூடு பிடித்து இருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் ரூ.583.48 கோடி சொத்து மதிப்பு கொண்ட நபர் ஒருவர் வேட்பாளராக களம் காண்கிறார்.

தமிழ்நாட்டின் பணக்கார வேட்பாளர்
உலகின் மிகப்பெரிய தேர்தல் நடைமுறையான இந்திய மக்களவை தேர்தல் விரைவில் நாடு முழுவதும் நடைபெற உள்ளது.

வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய தொடங்கி உள்ள நிலையில், ஏப்ரல் 19ம் திகதி தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில் ஈரோடு தொகுதியில் அ.இ.ஆ.தி.மு.க கட்சி சார்பாக போட்டியிடும் ஆற்றல் அசோக் குமார்(Aatral Ashok Kumar), தமிழ்நாட்டின் பணக்கார வேட்பாளராக அறியப்படுகிறார்.

தேர்தல் ஆணையத்தில் அவர் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தின் படி, அவரது சொத்து மதிப்பு சுமார் ரூ.583.48 கோடி தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது மனைவி கருணாம்பிகாவின் சொத்து மதிப்பு சுமார் ரூ.69.98 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருணாம்பிகா, ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி பாஜக எம்.எல்.ஏ டாக்டர் சரஸ்வதியின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈரோட்டில் வசிக்கும் அசோக் குமார்(53), தன்னிடம் ரூ.10 லட்சம் பண நோட்டுகள் இருப்பதாகவும், மனைவி கருணாம்பிகாவிடம் ரூ 5 லட்சம் பண நோட்டுகள் இருப்பதாகவும் இருவரிடமும் தலா 10 கிலோ தங்கம் இருப்பதாகவும் பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கல்வி மற்றும் தொழில்
அசோக் குமார் இந்தியன் பப்ளிக் பள்ளி(The Indian public School) அலாய்ஸ் பிரைவேட் லிமிடெட் (Amex Alloys Private Limited) ஆகிய பல கல்வி மற்றும் பிற நிறுவனங்களுக்கு நிறுவன உறுப்பினர் மற்றும் இயக்குநராக உள்ளார்.

பொறியல் பட்டத்தை கோயம்புத்தூர் கல்லூரியில் முடித்த அசோக் குமார், முதுகலை பட்டத்தை அமெரிக்காவில் உள்ள லூயிஸ்வில்லே பல்கலைக்கழகத்தில் முடித்துள்ளார்.

அத்துடன் MBA பட்டத்தை அமெரிக்காவின் இண்டியானாபோலிஸ் பல்கலைக்கழகத்தில் பெற்றுள்ளார்.

மேலும் இவர் Microsoft மற்றும் Intel ஆகிய சர்வதேச நிறுவனங்களிலும் வேலை பார்த்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.