;
Athirady Tamil News

காசாவில் பட்டினிக் கொலை! உணவுக்காக போராடி சாகும் மக்கள்

0

காசாமீது வான்வெளி ஊடாக வீசப்பட்ட உதவிப்பொருட்கள் கடலில் விழுந்தவேளை அவற்றை எடுக்க முயன்ற 12 பேர் கடலில்மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

இஸ்ரேலின் ஆறுமாத இராணுவ நடவடிக்கை காரணமாக காசவில் பெரும் பட்டினிநிலை உருவாகியுள்ள நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வடகாசாவில் உள்ள பென்லகியா கடற்கரையோரத்தை நோக்கி பொதுமக்கள் ஒடுவதையும் அதன் பின்னர் ஆழமான நீரில் பொதுமக்கள் காணப்படுவதையும் பின்னர் அவர்களின் உடல்கள் மீட்கப்படுவதையும் காண்பிக்கும் வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.

உதவிப்பொருட்கள்
தனது பிள்ளைகளிற்கு உணவை பெற்றுக்கொள்வதற்காக கடலுக்குள் நீந்தி சென்ற நிலையில் ஒரு தந்தை தியாகியாக மாறிவிட்டார் என கடற்கரையில் காணப்படும் ஒருவர் வீடியோவில் பதிவிட்டுள்ளார்.

மேலும் குறித்த நபர் அவர்கள் தரைவழி ஊடாக மனிதாபிமான உதவிகளை வழங்கவேண்டும் ஏன் இப்படி செய்கின்றார்கள் என கேள்வி எழுப்பியுள்ளார்.

மனிதாபிமான உதவி
அத்தோடு 18 பொதிகளில் மனிதாபிமான உதவிகளை பரசூட் மூலம் வீசிய நிலையில் பென்டகன் பரசூட் இயங்காததால் அவை கடலிற்குள் விழுந்தன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காசாவில் சிலர் களைகளை உண்பதற்கும் விலங்குகளின் உணவிலிருந்து தயாரிக்கப்படும் ரொட்டியை உண்பதற்குமான முயற்சிகளில் ஈடுபட்டுள்ள பரிதாபமான நிலையில் அங்கு மனிதாபிமான பொருட்கள் விநியோகத்தின் போது உயிரிழப்புகள் ஏற்படுவது வழமையாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.