20 ஆண்டுகளாக தந்தை மறைத்த உண்மை; இப்படியுமா? க்ஷாக்கான மகன்!
சீனாவின் ஹூனான் மாகாணத்தை சேர்ந்த கோடீஸ்வரரான ஜாங் யூடொங் தனது மகனிடம் 20 ஆண்டுகளாக ஏழை என நாடகமாடி வந்துள்ள சம்பவம் த்ற்போது தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக கோடீஸ்வரரின் மகன் ஜான்ங் ஜிலோங் சமீபத்தில் அளித்த பேட்டி சீன வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் , எனக்கு 20 வயது ஆகும் வரை நாங்கள் கோடீஸ்வரர்கள் என்பதே தெரியாது.
உழைப்பின் அருமையை புரிந்து கொள்ள முடிந்தது
சாதாரண குடியிருப்பில் வசித்து வந்தோம். சாதாரண பள்ளியில் தான் படித்தேன். எங்களுக்கு ஒரு நிறுவனம் இருக்கிறது என்பது மட்டும் தெரியும். எனினும் அந்த நிறுவனமும் கடனில் இயங்குவதாக அப்பா தெரிவித்திருந்தார்.
அதனால் அந்த கடன்களை அடைக்க வேண்டும் என்று நான் கடுமையாக படித்தேன். படிக்கும் போதே ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தேன். அப்போது மாதம் 6 ஆயிரம் யுவான் சம்பளம் கிடைக்கும்.
அதை எனது தந்தையிடம் கொடுத்து கடனை அடைக்குமாறு கூறுவேன். நான் கல்லூரி படிப்பை முடித்த பிறகே அப்பா எங்களின் பொருளாதார நிலை குறித்து கூறினார்.
அவர் சொத்து விபரத்தை மறைத்து பொய் கூறியதால் தான் உழைப்பின் அருமையை எங்களால் புரிந்து கொள்ள முடிந்தது என ஜான்ங் ஜிலோங் கூறியுள்ளார்.