விபத்தில் பலியான வைத்திய அதிகாரி : சமூக ஆர்வலர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டு
வீதி விபத்தில் முல்லைத்தீவு வைத்திய அதிகாரி பலியானமை தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்ற சமூக ஆர்வலர்களின் கருத்து பொது மக்களை சிந்திக்க வைத்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
அதிகரிகளில் 90% சீட்பெலிட் அணிவதில்லை
இந்த அரச இலச்சினைகளுடனும் அலுவலக பெயர்கள் தாங்கியும் பதவி நிலைகளின் பெயர்கள் தாங்கியும் செல்லும் வாகனங்களில் பயணிக்கும் அதிகரிகளில் 90% சீட்பெலிட் அணிவதில்லை அப்படியானவர்களை பொலிஸாரும் கண்டுகொள்வதில்லை.
வேகக்கட்டுப்பாடு சாலை ஒழுங்குகள் என்பனவற்றையும் இவர்கள் பின்பற்றுவதில்லை.
எயார்பாக் வெடிக்காமல் போனால் என்ன நடக்கும் என சிந்தித்தது உண்டு.
எயார்பாக் வெடிச்சதால் காப்பாற்ற முயற்சித்து மரணம் இதுவே, எதுவும் இல்லாத நிலை எனில் இந்த அரச வாகனங்கள் பெரும்பாலும் யாழுக்கு வெளியில் தானே இப்படி நடக்குது ஒருவேளை யாழ்ப்பாணத்தில் நடந்து ஒரு அதிகாரி பலியானால் இங்கயும் சீட்பெலிட் போடுவார்களோ என்னமோ? என கூறியுள்ளார்.