அடுத்த தலைமுறை… பயணிகள் விமானத்தை உருவாக்கும் பிரபல நிறுவனம்!
ஜப்பானில் உள்ள முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனமாக மிட்சுபிசி நிறுவனம் (Mitsubishi), அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
பசுமை புரட்சி, புவி வெப்பமயமாதல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு அந்த நிறுவனம் விமானத்தை உருவாகவுள்ளது.
குறித்த விமானத்தில் கரியமில வாயு வெளியேற்றத்தை கட்டுப்படுத்தும் வகையில் ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜின் பயன்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு ஜப்பானின் தொழில்துறை அமைச்சகம் ஒப்புதல் அளிக்கப்பட்டு 2035-ம் ஆண்டுக்குள் நிறைவேற்றப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த திட்டத்திற்கு முதல்கட்டமாக 33 பில்லியன் அமெரிக்க டொலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.27 லட்சம் கோடி) ஒதுக்கப்பட்டுள்ளது.