டைட்டானிக் ரோஸை உயிருடன் வைத்திருந்த மரக்கதவு ரூ.21 கோடிக்கு ஏலத்தில் விற்பனை
ஜேம்ஸ் கேமரூனின் டைட்டானிக் படத்தின் பெயரைக் கேட்டாலே, 1500 பேர் உயிரிழந்த சோக சம்பவம், அற்புதமான காதல் கதை நம் கண்முன்னே நகர்கிறது.
குறிப்பாக கிளைமாக்ஸில் கதாநாயகன் ஜாக் (Leonardo Di Caprio) கதாநாயகி ரோஸை (kate winslet) ஒரு மரக் கதவின் மேல் ஏற்றி அவரை காப்பாற்றும் காட்சியை படம் பார்த்த யாரும் மறக்க முடியாது.
இப்போது, அந்தக் காட்சியில் பயன்படுத்தப்பட்ட கதவு ஏலத்தில் 718,750 டொலர்களுக்கு (இலங்கை பணமதிப்பில் சுமார் 21.5 கோடி ரூபாய்) ஏலத்தில் விற்கப்பட்டது.
இந்த டைட்டானிக் நினைவுச்சின்னம் Heritage Auctions ஏலத்தில் அதிக வசூல் செய்த பொருளாக மாறியுள்ளது..
இந்தக் கதவு கப்பலின் முதல் வகுப்பு லவுஞ்ச் நுழைவாயிலுக்கு மேலே உள்ள கதவு சட்டத்தின் ஒரு பகுதி என படத்தின் தயாரிப்பாளர்கள் கூறியுள்ளனர்.
அதேபோல் இந்த ஏலத்தில், kate winslet பயன்படுத்திய சிஃப்பான் ஆடை 125,000 டொலருக்கு (இலங்கை பணமதிப்பில் ரூ.3.75 கோடி) ஏலம் போனது.