;
Athirady Tamil News

குறுஞ்செய்தி ஊடாக அறிவிக்கப்படும் பரிசுகள் ; பொது மக்களுக்கான எச்சரிக்கை

0

பண்டிகைக் காலங்களில் பிரபல நிறுவனங்களின் வர்த்தக நாமங்களைப் பயன்படுத்தி சமூக வலைத்தளங்கள் ஊடாக பெரும் மோசடி இடம்பெற்று வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பூஜையின் போது ஏன் மணி அடிக்க வேண்டும் தெரியுமா?
இதன்மூலம் பொதுமக்களின் தகவல்களை பெறும் மோசடிக்கு உள்ளாக்கிய சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக இலங்கை கணினி அவசர பதில் மன்றம் தெரிவித்துள்ளது.

பெறுமதியான பரிசுகள் வழங்கப்படும் என்று கையடக்கத் தொலைபேசிகளுக்கு குறுஞ்செய்தி அனுப்பி தரவுகள் பெறப்படுவதாக அதன் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தம்மபொல குறிப்பிட்டுள்ளார்.

இந்த வருடம் ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் மாத்திரம் 200 இற்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.